• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகின் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா!

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா!

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா!

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான டைம்ஸ், ஆண்டுதோறும் உலக அளவில் செல்வாக்கு மிக்க 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

  • Share this:
    அந்தவகையில், 2021 ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து இளவரச தம்பதி ஹாரி-மேகன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்தும் பல தலைவர்கள் இடம்பெற்று உள்ளனர். இதில் முக்கியமாக பிரதமர் மோடி, மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானார்ஜி, தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடி குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவில் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு உருவான மிகப்பெரிய சக்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல், ம ம்தா பானர்ஜி குறித்து குறிப்பிடுகையில், ஆணாதிக்க சமூகத்தில் தனது திறைமையை நிரூபித்தவர் அச்சமில்லாத அரசியலின் முகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முக்கயமாக, தாலிபான் பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பாரதரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: