குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜப்பான் முன்னாள் பிரதமர் Shinzo Abe மூலம் 2007ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் வீழ்ச்சி அடைந்த இந்த அமைப்பு 2017ம் ஆண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர். இந்த நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதுபோல, ஜப்பான் முன்னாள் பிரதமர், ஆஸ்த்ரேலியா பிரதமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆகியோருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையின் பிரபலமான பட்டுப் பாயை பரிசாக வழங்கியுள்ளார்.
பத்தமடை பட்டுப்பாயின் சிறப்புகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளர்க்கப்படும் 'கோரை' புல்லில் இருந்து பட்டுப் பாய் தயாரிக்கும் தொழில் பிரபலமாக இருந்துவருகிறது. சில்க் அல்லது பருத்தியைப் பயன்படுத்தி கைத்தறி மூலம் இந்தப் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பாய்கள் தயாரிக்கப்படும் கோரைப் புற்கள், தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் தமிழ்நாடு, கேரளாவிலுள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் மிகுதியாக வளர்கின்றன.
Quad Summit: அமெரிக்க அதிபர் பைடன் உடன் நரேந்திர மோடி சந்திப்பு... குவாட் அமைப்புக்கு பாராட்டு
பத்தமடை பாய்கள் மிகவும் மிருதுவாகவும், நன்கு மடியக் கூடியதாகவும் இருப்பது அதன் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமாகவும், மிகவும் நெருக்கமாகவும் நெய்யப்பட்ட பத்தமடை பாய்கள் பட்டுப் பாய்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் துணி போன்ற உணர்வைக் கொடுப்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. கிட்டதட்ட 45 நாட்கள் கோரைப் புற்கள் ஊறவைத்து பதப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் ஒரு பாயை உருவாக்க 2-3 வாரங்கள் தேவைப்படுகிறது. மிகச் சிறந்த பட்டுப் பாய்களை உருவாக்க கோரைப் புற்களைப் பதப்படுத்துவது மற்றும் நெய்வதற்கு நான்கு மாத காலங்கள் கூட தேவைப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.