பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: விழித்துக் கொண்ட கனடா அரசு- இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடி.

கனடா வெளியுறவு துறை அமைச்சர் மார்க் கார்னியுவை, இந்திய  வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.அதன் எதிரொலியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரத்தில், சில நடவடிக்கைகளை உத்தரவிட்டுஉள்ளார்.

 • Share this:
  கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், பிரதமர் மோடிக்கும், அங்கு பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து விழித்துக் கொண்ட கனடா அரசு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளது.

  மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வட அமெரிக்க நாடான கனடாவில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடந்த டிசம்பர், 26ம் தேதி, ஒட்டாவாவில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் வான்கூவரில் உள்ள துணை துாதரகத்தின் அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் வந்துள்ளன. இதையடுத்து, கனடா போலீசிடம், புகார்கள் அளிக்கப்பட்டது. எனினும், அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

  இதையடுத்து, சமீபத்தில், வான்கூவர் துணை துாதரகத்திற்கு வெளியே, காலிஸ்தான் ஆதரவாளரான இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.
  நரிந்தர் சிங் கால்சா என்பவரின், 'பேஸ்புக்' பக்கத்தில் இருந்து, அந்த கொலை மிரட்டலுக்கான பதிவையும், இந்தர்ஜித் வெளியிட்டார். அது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  கனடா வெளியுறவு துறை அமைச்சர் மார்க் கார்னியுவை, இந்திய  வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.அதன் எதிரொலியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரத்தில், சில நடவடிக்கைகளை உத்தரவிட்டுஉள்ளார்.

  இந்திய தூதரகத்திலிருந்து கனடா பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பிரதமர் மோடி மீதான கொலை மிரட்டல் பயங்கரவாதத் தன்மை கொண்டது எனவே இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
  விவசாயப் போராட்டத்துக்கு உலகப் பிரபலங்கள், குறிப்பாக ரிஹானா என்ற பாப் பாடகியும், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர், இதில் கிரேட்டா தெரிவித்த ஆதரவு கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு குழுவுக்கு தொடர்புடைய டுல்கிட்டுடன் சம்பந்தப்பட்டது என்ற செய்திகள் எழுப்பப்பட்டன.

  இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கடைசியாக கனடா அரசு விழித்துக் கொண்டு செயல்பட்டது.
  Published by:Muthukumar
  First published: