ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு: சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற பின்னர் சீன அதிபரை முதன்முறையாக சந்திக்க உள்ளார்.

Web Desk | news18
Updated: June 7, 2019, 7:36 PM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு: சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
(AP Photo)
Web Desk | news18
Updated: June 7, 2019, 7:36 PM IST
ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற பின்னர் சீன அதிபரை முதன்முறையாக சந்திக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார். இதுகுறித்து மிஸ்ரி பேசுகையில், “சமீப காலமாக நல்ல முதிர்ச்சியான, ஸ்திரமான நட்புறவை இந்தியா சீனா உடன் வளர்த்து வருகிறது.

அலுவல் அல்லாத சந்திப்பு ஒன்றில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீன அதிபரைச் சந்தித்துப் பேசியது இருநாடுகளின் நட்புறவில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அதன் பின்னர் நடக்கும் இந்தச் சந்திப்பும் சிறப்பான ஒன்றாக அமையும்” என்றார்.

கிர்கிஸ்தானில் வருகிற ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகிறார் என்றாலும் அவருடன் பிரதமர் மோடி சந்திக்கப்போவதில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: 15 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளும் சிறுவர்கள்- யுனிசெஃப் புதிய ஆய்வு
First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...