ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு...

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு...

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

ஷின்சோ அபே இறுதி சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் நாட்டின் பிரதமர் கிஷிடாவை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiatokyotokyotokyo

  ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

  கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இவரது இறுதி  சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சிறந்த சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் டோக்கியோ செல்கிறேன்.

  அனைத்து இந்தியர்களின் சார்பாக, பிரதமர் கிஷிதா மற்றும் திருமதி அபேவுக்கு நான் இரங்கலை தெரிவிப்பேன். மறைந்த அபே அவர்கள் எதிர்பார்த்ததுபோல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  இன்று அதிகாலை ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடா சந்தித்தார். அதிபர் கிஷிடாவிடம் ஷின்சோ அபேவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாட்டு உறவுக்கும் அபே ஆற்றிய பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்தார். பின்னர் இரு நாட்டு அதிபர்களும் ராஜிய உறவு குறித்தும், பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர். மேலும், இரு நாட்டு தலைவர்களும் இந்திய-ஜப்பான் கூட்டுறவை மேலும் பலப்படுத்தி, சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பலம் பெற துணை நிற்பதாக உறுதியளித்தன.

  தொடர்ந்து அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா நன்றி தெரித்தார். பிரதமர் மோடி, பிரதமர் அபேவுடன் இணைந்து இந்தியா - ஜப்பான் உறவுகளை பலப்படுத்தியதாக கிஷிடா புகழாரம் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: 52 நொடிகளில் 100 கி.மீ. வேகம் - ஜப்பானின் புல்லட் ரயில் வேகத்தை முறியடித்த வந்தே பாரத் ரயில்.!

  தொடர்ந்து அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஷின்சோ அபேவை இந்தியா இழந்து வாடுகிறது எனவும் அவர் தெரிவித்தார். இந்த இறுதி சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோனி அல்பனேஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல உலக தலைவர்கள், வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Japan, PM Modi, Shinzo Abe