மாலத்தீவு அதிபராக பதவியேற்றார் சொலிஹ் - மோடி நேரில் வாழ்த்து!

முகம்மது சொலிஹ் உடன் பிரதமர் மோடி (Twitter/MEAIndia)

  • News18
  • Last Updated :
  • Share this:
மாலத்தீவு அதிபராக முகம்மது சொலிஹ் பதவியேற்கும் விழாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதிய அதிபருடன் இணைந்து மேம்படுத்த ஆவலாக உள்ளேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சொலிஹ் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவியேற்றார்.

தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட மோடி புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் முகம்மது சொலிஹ்-க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவின் முன்னாள் அதிபர்களான அப்துல் கயூம், முகம்மது நஷீத், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோருடன் மோடி அமர்ந்திருந்தார்.

2014-ம் ஆண்டு மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல் கயூம் கலந்து கொண்டார். பிரதமராக பதவியேற்ற பிறகு மாலத்தீவுக்கு மோடி செல்வது இதுவே முதன்முறையாகும்.

Also See..

Published by:Sankar
First published: