ஹோம் /நியூஸ் /உலகம் /

'இணைந்து செயல்படுவோம்...' - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் தொலைபேசியில் வலியுறுத்திய பிரதமர் மோடி..!

'இணைந்து செயல்படுவோம்...' - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் தொலைபேசியில் வலியுறுத்திய பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ரிஷி சுனக்குடன் உரையாடல்

பிரதமர் மோடி ரிஷி சுனக்குடன் உரையாடல்

இரு சிறந்த ஜனநாயகங்களும் பாதுகாப்பு, ராணுவம், பொருளாதார கூட்டுறவு ஆகியவற்றை இணைந்து மேம்படுத்த ஆர்வத்துடன் உள்ளதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பதிலளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaLondonLondon

  பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பொறுப்பேற்ற பின் அவரிடம், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தொலைப்பேசி வாயிலாக நேற்று உரையாடியுள்ளார். இதை இரு நாட்டு தலைவர்களும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

  தொலைப்பேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ரிஷி சுனக்கிடம் இன்று பேசியதில் மகிழ்ச்சி. பிரிட்டன் பிரதமராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு நாட்டின் உறவையும் வலுப்படுத்தும் விதமாக இணைந்து செயல்படுவோம். இரு நாட்டிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இருவரும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

  பிரதமர் மோடியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள ரிஷி சுனக், "எனது புதிய பணியை தொடங்கிய தருணத்தில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி. இரு நாடுகளுக்கும் இடையே பகிர்வதற்கு பல அம்சங்கள் உள்ளன. இரு சிறந்த ஜனநாயகங்களும் பாதுகாப்பு, ராணுவம், பொருளாதார கூட்டுறவு ஆகியவற்றை இணைந்து மேம்படுத்த ஆர்வத்துடன் உள்ளேன்" என்றார்.

  பிரெக்சிட் விவகாரத்திற்கு பின்னர் பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 7ம் தேதி போரிஸ் ஜான்சன் விலகினார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்களில், பதவியை ராஜினாமா செய்தார்.

  இதையும் படிங்க: எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்... முதல் நாளிலேயே முன்னணி நிர்வாகிகள் வெளியேற்றம்!

  இதைத்தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: PM Modi, Rishi Sunak, Trade