பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது பாலியல் புகார்: நிகழ்ச்சித் தொகுப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மீது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அலி சலீம் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது பாலியல் புகார்: நிகழ்ச்சித் தொகுப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
இம்ரான் கான் - சின்தியா ரிச்சி
  • Share this:
பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் அலி சலீம். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுடன் அமெரிக்க சாகச வீராங்கனை சின்தியா ரிச்சி தனிமையில் இருக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது சின்தியாவிடம் இம்ரான்கான் உடலுறவுகொள்ள விருப்பம் தெரிவித்தார்“ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இதற்கிடையே ஃபேஸ்புக் நேரலையில் பேசி சாகச வீராங்கனை சின்தியா “கடந்த மார்ச் மாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தாம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா, அமைச்சர் மக்தூம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் சின்தியாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை” என்று மறுத்துள்ளார்.
First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading