அல்கொய்தாவுக்கு பயிற்சி; ஒசாமா பின்லேடனுக்கு இருப்பிடம்! உலக அரங்கில் ஒப்புக்கொண்ட இம்ரான் கான்

எல்லா ராணுவத்தினரும் அந்த முடிவுக்கு உடன்படவில்லை. அவர்கள், ஏற்கெனவே அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்திருந்ததால் அவர்களுக்கு அந்த அமைப்புடன் தொடர்ந்து தொடர்பு இருந்துள்ளது.

அல்கொய்தாவுக்கு பயிற்சி; ஒசாமா பின்லேடனுக்கு இருப்பிடம்! உலக அரங்கில் ஒப்புக்கொண்ட இம்ரான் கான்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: September 24, 2019, 5:41 PM IST
  • Share this:
பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் உளவுஅமைப்பான ஐ.எஸ்.ஐயும் சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்தது என்று தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டுக்கு ஆதரவாக இருந்த சோவியத் ராணுவத்துக்கும் எதிராக முஜாஹிதின் என்ற உள்நாட்டுக் குழு தீவிரமாகப் போராடிவந்தது. அந்தக் குழுக்களுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்தன.

அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானின் பெசாவர் நகரில் 1988-ம் ஆண்டு பின்லேடனால் தொடக்கப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. இது உலக அரங்கில் அனைவருக்கு தெரிந்த விவகாரமாக இருந்தாலும், பாகிஸ்தானியத் தலைவர் யாரும் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது கிடையாது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் அங்கே முகாமிட்டுள்ளனர்.  இந்தநிலையில், நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘பாகிஸ்தான் ராணுவமும் எங்கள் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் அல்கொய்தாவுக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்த மற்ற தீவிரவாத அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் சண்டை புரிவதற்காக பயிற்சி அளித்தோம். அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை அல்-கொய்தா தகர்த்த பிறகு அந்த அமைப்புடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டோம்.

ஆனால், எல்லா ராணுவத்தினரும் அந்த முடிவுக்கு உடன்படவில்லை. அவர்கள், ஏற்கெனவே அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்திருந்ததால் அவர்களுக்கு அந்த அமைப்புடன் தொடர்ந்து தொடர்பு இருந்துள்ளது. அதனால், பாகிஸ்தானில் உள்நாட்டுக்குள்ளிருந்தே நிறையத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், ராணுவத் தளபதிக்கும், ஐ.எஸ்.ஐ தலைவருக்கும் பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது குறித்து தெரியாது. கடைமடத்தில் இருந்த ராணுவத்தினர் அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்’ என்று தெரிவித்தார். பின்லேடன் எப்படி பாகிஸ்தானில் தங்கியிருந்தார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இம்ரான் கான் மேற்கண்ட பதிலைக் கூறியுள்ளார்.

Also see:
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்