• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • டெக்ஸாஸ் மாகாண உறுப்பினரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வைரலாகும் வீடியோ

டெக்ஸாஸ் மாகாண உறுப்பினரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மோடி! வைரலாகும் வீடியோ

மோடி, ட்ரம்ப்

மோடி, ட்ரம்ப்

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர்(Senator)ஜான் கெனின் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர்(Senator) ஜான் கார்னின் மனைவியிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.  மன்னிப்பு கேட்கும் வீடியோ பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

    ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்து பேசினார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்குள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நலமா மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    அப்போது, மோடியை வரவேற்கும் விதமாக பரதநாட்டியம், குச்சிப்புடி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய கலசாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களும், அமெரிக்காவின் நடன நிகழ்ச்சிகளும் வண்ணமயமாக நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர்(Senator)ஜான் கெனின் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது ஜான் கெனினின் மனைவியிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்.


    இந்த வீடியோ பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘நான், உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள். ஏனென்றால், இன்று உங்களுக்குப் பிறந்தநாள். உங்களுடைய கணவர், இன்று உங்களுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருப்பீர்கள். ஆனால், அவர் என்னுடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அது, உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். அழகான வாழ்க்கைக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: