Home /News /international /

பசி.. வறுமை.. உணவுக்காக சிறுமிகளை விற்கும் ஆப்கானியர்கள் - ஆப்கான் அவலம்

பசி.. வறுமை.. உணவுக்காக சிறுமிகளை விற்கும் ஆப்கானியர்கள் - ஆப்கான் அவலம்

ஆப்கான் சிறுமி

ஆப்கான் சிறுமி

உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை காரணமாக நாளுக்கு நாள் குழந்தைகளை விற்கும் நிலை அதிகரித்துக்கொண்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    ஆப்கானிஸ்தானின் மோசமான வரலாற்றை தாலிபான்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.  வறுமை ஆப்கானியர்களை இறுகப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. பசி எனும் கொடிய நோய் மெல்ல தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதார வசதியில்லாத ஏழை எளிய மக்கள் அன்றாடம் பிழைப்பை நடத்த அள்ளல்படுகின்றனர். வீட்டில் இருக்கும் பிள்ளைச் செல்வங்களை விற்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இளம்பெண்கள், சிறுமிகள் விற்பனை பொருள்களாகிவிட்டனர்.

    பசி.. எனும் கொடிய நோய் ஏழை ஆப்கானியர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்துக்கொண்டிருக்கிறது. பர்வானா.. 9 வயதுச் சிறுமி ஆப்கானிஸ்தானில் திருமணத்திற்காக விற்கப்பட்ட பெண்களில் இந்த சிறுமியும் ஒருவர். வறுமையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பர்வானாவின் 12 வயது சகோதரி விற்கப்பட்ட நிலையில் தற்போது பர்வானாவும் 55 வயது நபருக்கு விற்கப்பட்டுள்ளார். உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை காரணமாக நாளுக்கு நாள் குழந்தைகளை விற்கும் நிலை அதிகரித்துக்கொண்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அப்துல் மாலிக் 9 வயது சிறுமியின் தந்தை பேசுகையில், “ எனக்கு அவமானமாக இருக்கிறது. என்னால் இரவு தூங்கமுடியவில்லை. எங்கள் குடும்பத்தில் 8 பேர் இருக்கிறார்கள். வேலைக்காக அலைந்து பார்த்துவிட்டேன் எதுவும் கிடைக்கவில்லை. உணவுக்காக உறவினர்களிடம் கடன் மேல் கடன் வாங்கிவிட்டேன். உணவுக்காக என் மனைவி எல்லோரிடமும் கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். என் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை உயிருடன் வைத்துக்கொள்ள என் மகளை விற்பனை செய்யும் நிலைக்கு வந்தேன்” என்கிறார் கண்ணீருடன்.

    சிறுமிக்கு தான் ஒரு ஆசிரியை ஆக வேண்டும் என கனவு. தன் குடும்பத்தை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என நினைத்தால். ஆனால் அவளது முயற்சிகள் அனைத்தும் தோல்வியும் முடிந்தது. 2200 அமெரிக்க டாலருக்கு இந்த விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. கூர்பான் என்ற நபருக்கு அந்த சிறுமியை விற்றுள்ளனர். வாசலில் வந்து சிறுமியை அழைத்து செல்ல கார் வந்து நின்றபோது அவள் தனது அம்மாவின் கால்களை பின்னிக்கொண்டு நகர மறுத்துவிட்டாள். அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி உள்ளனர். கூர்பானிடம் மகளை ஒப்படைக்கும்போது. இனி இவள் உங்களுக்கானவள். பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அவளை அடிக்காதீர்கள் எனக் கண்ணீருடன் கூறியுள்ளார்.

    கூர்பானுக்கும் மனைவி உள்ளார். அவர் இந்த விற்பனை திருமணத்துக்கானதாக பதிவு செய்யவில்லை. சிறுமியை நன்றாக பார்த்துக்கொள்வோம். பர்வானா மிகவும் மலிவாக கிடைத்தால். அவளது தந்தை ஏழை அவருக்கு பணம் தேவைப்பட்டது. அவள் என் வீட்டில் வேலை செய்வாள். நான் அவளை அடிக்க மாட்டேன். நான் அவளை குடும்ப உறுப்பினர் போல் நடத்துவேன். நான் அன்பாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Afghanistan, Food, Hungry, Taliban

    அடுத்த செய்தி