ஹோம் /நியூஸ் /உலகம் /

மோசமான வானிலையால் ஆற்றில் விழுந்த விமானம்! பயணிகளைத் தேடும் மீட்புப்படை!

மோசமான வானிலையால் ஆற்றில் விழுந்த விமானம்! பயணிகளைத் தேடும் மீட்புப்படை!

விமான விபத்து

விமான விபத்து

தான்சானியாவில் 49 பயணிகளுடன் சென்ற தனியார் விமானம் விக்டோரிய நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaTanzaniaTanzaniaTanzaniaTanzania

  ஆப்பிரிக்கா கண்டம் தான்சானியாவில் ப்ரேஸிஸின் ஏர் என்ற தனியார் விமானம் 49 பயணிகளுடன் இன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் புகோப நகரில் தரையிறங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் மோசமான வானிலை காரணத்தினால் நிலைதடுமாறி நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  விமானத்தின் 43 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் பயணம் செய்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி ஏரியில் விழுந்த விமானத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து, ப்ரேஸிஸின் ஏர் வெளியிட்ட செய்தி அறிவிக்கையில், மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  பிகோப நகர மண்டல ஆணையர் ஆல்பர்ட் சலமில அளித்த தகவலின் படி, ஏரியில் விழுந்த 26 பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர். 3 பேரை சடலமாக மீட்டுள்ளனர்.  மேலும் தொலைந்த 20 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விமானத்தில் விமானி சிக்கிக் கொண்ட நிலையில் அவரை வெளியில் எடுக்க மீட்புப் படை  முயற்சி செய்து வருகின்றனர். தற்போது மீட்புப் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

  சிறிய அளவிலான விமானம் பாதிக்கு மேல் நீரில் மூழ்கிய நிலையில் கயிறு மூலம் கரைக்கு இழுக்க செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அப்பகுதி மீனவர்களும் ஏரியில் தொலைந்தவர்களை தேடி வருகின்றனர்.

  தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன், இந்த சம்பவத்திற்காக இரங்கலை தெரிவித்துள்ளார்.

  Also Read : வரலாறு காணாத வறட்சி..கென்யாவில் கொத்து கொத்தாக மடியும் காட்டு விலங்குகள்.. 200க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்!

  ப்ரேஸிஸின் ஏர் விமானம் தான்சானியா தலைநகர் டர் எஸ் சலாம் (Dar es Salaam)இல் இருந்து ககேரா பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: Plane crash, Tanzania