Home /News /international /

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை மலிவு விலையில் வாங்க இந்தியா முடிவு?

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை மலிவு விலையில் வாங்க இந்தியா முடிவு?

புதின் மோடி

புதின் மோடி

ரஷ்யாவிடம் இருந்து 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை மலிவு விலையில் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும், ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

    இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 139 டாலராக உயர்ந்த நிலையில், தற்போது 100 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது.

    இதனிடையே மலிவு விலையில், கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 85 சதவீதத்தை இறக்குமதியை சார்ந்தே உள்ளது.

    இந்நிலையில், முதற்கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இறக்குமதிக்கான செலவு மற்றும் காப்பீட்டை ரஷ்யா கவனித்துக் கொள்ளும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி, ரஷ்யாவிடம் சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்குவது, அமெரிக்காவின் தடைகளை மீறுவதாக இருக்காது என்றும், ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கை வரலாற்றின் தவறான பக்கத்தில் இடம்பெற்றுவிடும் எனவும், போரை ஆதரிப்பது போல் அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

    ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் No War என்ற பதாகையைக் காட்டிய ஊழியர்

    ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும் ஜென் சகி கூறினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crude oil, India, Russia

    அடுத்த செய்தி