Home /News /international /

விமானத்தை கடத்தி கட்டிடத்தில் இடிக்க போவதாக மிரட்டல்.. பரபரப்பு வீடியோ

விமானத்தை கடத்தி கட்டிடத்தில் இடிக்க போவதாக மிரட்டல்.. பரபரப்பு வீடியோ

விமானம்

விமானம்

அந்த விமான நிலையத்தில் இருந்து பீச் சி90ஏ எனும் 9 பேர் பயணிக்க கூடிய சிறிய ரக விமானத்தை திருடியிருப்பதும் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiatupelotupelotupelotupelo
    அமெரிக்காவில் பிரபல வணிக நிறுவனத்தை விமானத்தின் மூலம் தகர்க்க உள்ளதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணத்தின் டுபெலோ நகரில் பிரபல வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.



    அதன்படி, மிஸிஸிப்பி நேரப்படி சரியாக காலை 5 மணிக்கு டுபெலோ நகரை சிறிய ரக விமானம் ஒன்று வட்டமிட தொடங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு வந்து அந்த விமானியுடன்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    மேலும் வாசிக்க: மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகாந்தர் சிலை திறப்பு

    மேலும் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் வயது  29 எனவும் அவர் டுபெலோ விமான நிலையத்தில் பணி புரிபவர் எனவும் தெரிய வந்தது. மேலும் அந்த விமான நிலையத்தில் இருந்து பீச் சி90ஏ எனும் 9 பேர் பயணிக்க கூடிய சிறிய ரக விமானத்தை திருடியிருப்பதும் தெரியவந்தது.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும் அப்புறப்படுத்தப்பட்டனர். 29 வயதான அந்த விமானியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: America, Flight Crash, Hijacked case

    அடுத்த செய்தி