• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நீண்ட மூக்கின் உதவியுடன் வீடியோ கேம்களை விளையாடும் பன்றிகள் - விஞ்ஞானிகள் பயிற்சி! 

நீண்ட மூக்கின் உதவியுடன் வீடியோ கேம்களை விளையாடும் பன்றிகள் - விஞ்ஞானிகள் பயிற்சி! 

பன்றி

பன்றி

வீடியோ கேம்களை விளையாடுவதற்கு உதவும் ஒரு ஆர்கேட்-ஸ்டைல் ஜாய்ஸ்டிக்கை எப்படி யூஸ் செய்வது என்றும் பன்றிகள் இப்போது நன்கு கற்றிருக்கிறது. 

  • Share this:
பன்றிகளை வைத்து உலகில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த பன்றிகள் என்ன செய்திருக்கிறது என்று கேட்டால்? இவைகள் குஷியாக வீடியோ கேம்களை விளையாட கற்றுக்கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கேட்பதற்கு மிகவும் வினோதமான சோதனை என்பதில் சந்தேகமில்லை. இப்போது விஞ்ஞானிகள் ஹேம்லெட், ஆம்லெட், எபோனி மற்றும் ஐவரி ஆகிய நான்கு பன்றிகளுக்கு இந்த கேமை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். வீடியோ கேம்களை விளையாடுவதற்கு உதவும் ஒரு ஆர்கேட்-ஸ்டைல் ஜாய்ஸ்டிக்கை எப்படி யூஸ் செய்வது என்றும் பன்றிகள் இப்போது நன்கு கற்றிருக்கிறது. 

ஜாய்ஸ்டிக் மற்றும் வீடியோ கேம்களுக்கு இடையிலான தொடர்பை பன்றிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளதை எண்ணி அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். இது ஒரு 'சிறிய சாதனை இல்லை' என்று கூறிய, ஆராய்ச்சியாளர்கள் இந்த பன்றிகள் எங்களை பாடாய்படுத்திவிட்டது என்றனர். இருந்தாலும் பன்றிகளுக்கு ட்ரைனிங் கொடுக்கும்போது அவை ஒவ்வொரு நிலையையும் பாஸ் செய்யும்போது அவற்றிற்கு பிடித்த உணவுகளை ரிவார்டுகளாக கொடுப்போம். அப்போது தான் அவை ஊக்கம் பெற்று மேலும் ட்ரைனிங்கிற்கு சம்மதிக்கும் என்று தங்களது கடினமான நிலையைப்பற்றி பகிர்ந்து கொண்டனர். 

மேலும், விஞ்ஞானிகள் கவனிக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பன்றிகளுக்கான இந்த உணவு ரிவார்டுகள் முடிந்தபோதும், பன்றிகள் விளையாடுவதைத் தொடர்ந்தன என்றார்கள். முன்னணி எழுத்தாளர் டாக்டர் கேண்டஸ் க்ரோனி, 'இந்த வகையான ஆய்வு முக்கியமானது. ஏனென்றால் எந்தவொரு உணர்வுள்ள மனிதர்களையும் போலவே, நாங்கள் பன்றிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம், அவற்றுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதெல்லாம் அவைகள் கவனிக்கின்றன' என்று கூறினார். 

மனிதர்களைப் போன்ற ஒரு சில விலங்குகளுக்கு கை, கால்கள் அல்லது வால் போன்ற உறுப்புகள் ஆக்டிவாக இருக்கும். ஆனால் பன்றிகளுக்கு அவ்வாறு இல்லை. அவைகள் தங்களுக்கு இருக்கும் நீண்ட மூக்கினை வைத்துதான் இந்த வீடியோ கேம்களை விளையாடுகிறது. இது உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம். இருப்பினும், பன்றிகளுக்கு இது எளிதானது அல்ல. யார்க்ஷயர் பன்றிகளில் (Yorkshire pigs) ஒன்றான ஹேம்லெட் (Hamlet) ஆம்லெட்டை (Omelette) விட சிறந்த கேமராக மாறியது, ஆனால் விளையாட்டின் நிலைகள் அதிகரிக்கும் போது பன்றிகள் இரண்டும் விளையாட்டோடு அதிகமாக போராட வேண்டியிருந்தது. 

ஆய்வில் ஈடுபட்ட மற்ற இரண்டு பன்றி இனங்கள், பானெபிண்டோ மைக்ரோ பன்றிகள் ஹேம்லெட் மற்றும் ஆம்லெட்டை விட மெதுவாக இருந்தன. குறிப்பாக ஐவரி பன்றி, இலக்குகளை அடைய 76% நேரத்தை எடுத்துக்கொண்டது. அதே நேரத்தில் எபோனி பன்றி அதை 34% நேரத்தில் டார்கெட்டை முடித்தது, இது உண்மையில் மிகப்பெரிய இடைவெளியாகும். அடிப்படையில் பன்றிகள் சமமான விளையாட்டுத் திறனை நிரூபிக்கவில்லை, இதனால் கேமை விரைவில் முடிக்க முடியாமல் இலக்கை அடையாத பன்றியிடம் நீண்ட நேரம் செலவானது. 

வொர்செஸ்டர்ஷையரில் உள்ள வில்லோ ஃபார்மைச் சேர்ந்த கேட் டேனியல்ஸ், விஞ்ஞானிகள் பன்றிகளின் இந்த செயலை கண்டு ஆச்சர்யப்பட்டாலும் தான் ஆய்வின் முடிவைக் கண்டு ஆச்சரியப்படவில்லை என்றார். BBC Radio 4க்கு  இது பற்றி பேசியவர் "இது பன்றிகளை பராமரிக்கும் எவருக்கும் ஆச்சரியமாக இருக்காது, பன்றிகள் Minecraftஐ விளையாடுவதில்லை, ஆனால் அவைகள் உணவு ரிவார்டுகளை பெற அந்த சூழ்நிலையை கையாள என்ன வேண்டுமென்றாலும் செய்யும் ஆகவே இதில் ஆச்சரியமில்லை" என்று அவர் கூறினார். விஞ்ஞானிகள் முன்னர் சிம்பன்சிகள் மற்றும் குரங்குகளுடன் இதுபோன்ற சோதனைகளை மேற்கொண்டனர், 

ஆனால் அவைகளுக்கோ கட்டைவிரல் இருப்பதுதான் கொஞ்சம் இடித்தது போலும் ஆகையால் தான் விஞ்ஞானிகள் பன்றிகளுக்கு மாறியிருக்கிறார்கள். Frontiers in Psychology என்ற இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. காலம் போகின்ற போக்கைப் பார்த்தால் இப்பொழுது மனிதர்கள் செய்துவரும் வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் விலங்குகளும் செய்ய தொடங்கி விடும் போல் தெரிகிறது. பன்றிகளுக்கு இதுபோன்ற கற்பிக்கும் போது பன்றிகளின் அடுத்த தலைமுறையும் இன்னும் ஸ்மார்ட்டாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: