இதுவேற ’மாரி’ - 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பந்தயப் புறா!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்திருந்த மாரி படத்தில் புறா பந்தயம் முக்கிய கருவாக இடம்பெற்றிருக்கும்.

news18
Updated: March 20, 2019, 11:54 AM IST
இதுவேற ’மாரி’ - 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பந்தயப் புறா!
மாரி படத்தில் புறாவுடன் தனுஷ்
news18
Updated: March 20, 2019, 11:54 AM IST
பெல்ஜியத்தைச் சேர்ந்த பந்தயப் புறா ’அர்மாண்டோ’வை சீனாவைச் சேர்ந்த இருவர் சுமார் 10 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்திருந்த மாரி படத்தில் புறா பந்தயம் முக்கிய கருவாக இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற, புறா பந்தயம் நம்ம ஊரில் மட்டுமல்ல, உலக அளவிலும் நடைபெற்று வருகிறது.

பிபா வலைதளத்தில் உள்ள அர்மாண்டோ புறா புகைப்படம்


அதிலும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ‘அர்மாண்டோ’ எனும் பந்தயப் புறா சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் மேற்கு பிளாண்டர்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜோல் வெர்ஷெட் வளர்த்து வந்த அர்மாண்டோ எனும் பந்தயப் புறா இதுவரை 3 பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐந்து வயாதான இந்த அர்மாண்டோவை எஃப்1 கார் பந்தய சாம்பியனான லூயிஸ் ஹாமில்டனின் பெயருடன் ஒப்பிட்டு, “புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என உள்ளூர் வாசிகள் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ’பிபா’ எனப்படும் ஆன்லைன் ஏல அமைப்பு நடத்திய ஏலத்தில் ’அர்மாண்டோ’ புறாவை 1.4 மில்லியன் டாலருக்கு (9.7 கோடி ரூபாய்) சீனாவைச் சேர்ந்த இருவர் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
Loading...
Also See..
First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...