ஹோம் /நியூஸ் /உலகம் /

சைக்கிளை அடித்துத்தூக்கிய அதிவேக ட்ரக்.. கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்!

சைக்கிளை அடித்துத்தூக்கிய அதிவேக ட்ரக்.. கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்!

கனடாவில் இந்திய மாணவர் பலி

கனடாவில் இந்திய மாணவர் பலி

கார்த்திக் கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் கார்த்திக் மிதிவண்டியில் சாலையை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கனடாவில் மிதிவண்டியில் வீதியைக் கடந்த 20 வயது இந்திய மாணவரை ட்ரக் வாகனம் இழுத்துச் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட நபரின் பெயர் கார்த்திக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹரியானாவில் உள்ள கர்னாலை சேர்ந்த கார்த்திக் 2021 ஆகஸ்ட் இல் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்ததாக அவரது உறவினர் பர்வீன் சைனி டொராண்டோ சிபிசி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கார்த்திக் கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் கார்த்திக் மிதிவண்டியில் சாலையை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ட்ரக்கின் ஓட்டுநர் செயின்ட் க்ளேர் அவென்யூ கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி திரும்பியுள்ளார். கார்த்திக் அதே நேரத்தில் கிழக்கு திசையில் இருந்து வந்து யோங்கேவைக் கடக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

இதையும் படிங்க: உணவுக்கே பணமில்லை.. குழந்தை கொலை.. பிட்காயினால் பணமிழந்த ஐடி ஊழியரின் விபரீத முடிவு!

இடித்த வேகத்தோடு கார்த்திக் மற்றும் அவரது பைக், டிரக் அடியில் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை விடுவித்து உயிர்ப்பிக்க அவசரகால பணியாளர்கள் முயற்சித்த போதிலும் கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கார்த்திக்கின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவர அவரது உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர். செப்டம்பருக்குப் பிறகு கார் விபத்தில் மரணம் அடைந்த இரண்டாவது சைக்கிள் ஓட்டுநர் இவர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொராண்டோவின் பரபரப்பான கிராசிங்குகளில் மேம்படுத்தப்பட்ட சாலை வடிவமைப்பின் அவசியத்தை கார்த்திக்கின் மரணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.


First published:

Tags: Accident, College student