ஹோம் /நியூஸ் /உலகம் /

4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பிலிப்ஸ் நிறுவனம் முடிவு

4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பிலிப்ஸ் நிறுவனம் முடிவு

பிலிப்ஸ் நிறுவனம்

பிலிப்ஸ் நிறுவனம்

விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் பிலிஸ்ப்ஸ் நிறுவனம் நிர்வாக்ததை சீரமைக்கும் விதமாக 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAmsterdamAmsterdam

  நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்து உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அந்நிறுவனம் தயாரித்த மருத்துவ கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டு சந்தையில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.

  இதன் காரணமாக நிறுவனம் 1.3 பில்லியன் யூரோ. அதாவது இந்திய மதிப்பில் 10,500 கோடிக்கு ரூபாய்க்கு மேலாக நஷ்டம் கண்டுள்ளது. நிறுவனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்று அந்நிறுவனத்தின் சிஇஓ பதவியை பிரான்ஸ் வான் ஹூடன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ராய் ஜாகோப்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

  ராய் பொறுப்புக்கு வந்தவுடனே, அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் நிறுவனத்தை சீரமைக்கும் விதமாக 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

  போட்டி நிறைந்த சூழலில் லாபத்தை ஈட்ட இது போன்ற நடவடிக்கை தேவை எனவும் வருத்தத்திற்கு உரியது என்றாலும் இதை தவிர்க்க முடியாது என்றுள்ளார். அந்நிறுவனத்தில் மொத்தம் 78,000 பேர் வேலை செய்துவரும் நிலையில், அதில் 5 சதவீதமான 4,000 பேரை வேலை நீக்கம் செய்ய புதிய சிஇஓ முடிவெடுத்துள்ளார்.கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கத்தின் எதிரொலியாகவே நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: பூமிக்கு வந்ததா UFO மர்ம விண்கலங்கள்..பசிபிக் கடல் பகுதியில் பறந்ததாக அமெரிக்க விமானிகள் பரபரப்பு தகவல்!

  ஏற்கனவே உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான ஆட்குறைப்பு கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jobs, Loss, Sales