Home /News /international /

பிலிப்பைன்ஸ் நாட்டை உருக்குலைத்த கோனி புயல் - 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை உருக்குலைத்த கோனி புயல் - 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை உருக்குலைத்த கோனி புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டை உருக்குலைத்த கோனி புயல்

பிலிப்பைன்ஸைத் தாக்கிய கடுமையான கோனி புயலால், 4 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிலிப்பைன்ஸ் அருகே கடல் பகுதியில் உருவான கோனி என பெயர் சூட்டப்பட்ட புயல், கட்டன்டுவேன்ஸ் தீவைத் தாக்கியது. அப்போது மணிக்கு 225 கிலோ மீ்ட்டர் வேகத்தில் காற்று வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    தலைநகர் மணிலாவில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Also read: உலக அளவில் 12 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு

    கடந்த வாரம் வீசிய சூறாவளியால், பிலிப்பைன்ஸ் நாட்டில் 22 பேர் மரணமடைந்த நிலையில், தற்போது கோனி புயலுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அல்பே உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோனி புயல், லூசான் தீவை கடந்துள்ள நிலையில், சியாரே மலைத்தொடரை தாக்கிய பின்பு வலுவிழக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

     













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Cyclone, Philippines

    அடுத்த செய்தி