முகப்பு /செய்தி /உலகம் / Video: பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - கட்டிட உச்சியிலிருந்து அருவி போல் கொட்டும் நீச்சல்குளம்!

Video: பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - கட்டிட உச்சியிலிருந்து அருவி போல் கொட்டும் நீச்சல்குளம்!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

Philippines Earthquake | வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

  • 1-MIN READ
  • Last Updated :

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தின் போது உயரமான கட்டிட உச்சியில் இருக்கும் நீச்சல்குளத்தின் நீர் கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏப்ரல் 22ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மணிலாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லுசோன் தீவை கடுமையாக தாக்கியது.

வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மணிலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வினால் அங்கிருந்த உயரமான அடுக்குமாடி கட்டடத்தின், உச்சியில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், அருவி போல் கொட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டடத்தின் உச்சியில் இருந்து இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட  நீச்சல் குளம் இயற்கையின் சீற்றத்தை சற்று கூட தாங்க முடியாமல் சீர் குழைந்து போனது.

Also Watch

First published:

Tags: Earthquake, Philippines