‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சால் சர்ச்சை

பிலிப்பைன்ஸ் நாடடில் இதுவரை 1.95 சதவீதம் பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடடில் இதுவரை 1.95 சதவீதம் பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்டே கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    11 கோடி மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை 13 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர், ரோட்ரிகோ டுட்டார்டே நாட்டு மக்களுக்கு தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என தெரிவித்தார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்கக்கூடாது என கூறிய அவர், இந்தியா அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Read More : இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்த பிரதமர்!

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவான மக்களே சென்றுள்ளனர். நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மக்கள் மறுப்பது அரசுக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனால், ‘தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்களா அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா என்று நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாடடில் இதுவரை 1.95 சதவீதம் பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Must Read : மூன்று மாநிலங்களில் அதிகம் காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்: கவலையளிக்கக் கூடியதாக மத்திய அரசு அறிவிப்பு!

    உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகின்றது. மக்களிடம் கொரோனா தடுப்பு மருந்தைப் கொண்டு சேர்த்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுகோ, அல்லது அமெரிக்காவுக்கோ சென்றுவிடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: