முகப்பு /செய்தி /உலகம் / தரையிறங்கும்போது ஏற்பட்ட தவறில் விமானம் வெடித்து சிதறியது: 29 பேர் உயிரிழப்பு!

தரையிறங்கும்போது ஏற்பட்ட தவறில் விமானம் வெடித்து சிதறியது: 29 பேர் உயிரிழப்பு!

விமான விபத்து

விமான விபத்து

 விமானம் தரையிறங்கும்போது பிரச்சனை ஏற்பட்டதாகவும் எவ்வளவோ முயன்றும் அதனை சரி செய்ய முடியவில்லை என்றும் விபத்து குறித்து தலைமை ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட தவறினால் வெடித்து சிதறியது.

பிலிப்பைன்ஸ் ராணுவத்துக்கு சொந்தமான  C-130 Hercules விமானத்தில்  92 பேர் பயணம் செய்த நிலையில், தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு இந்த விமானம் விலகி சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும்,50 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மீதமுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  பிலிப்பைன்ஸ் தலைமை ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்துள்ளார்.   விமானம் தரையிறங்கும்போது பிரச்சனை ஏற்பட்டதாகவும் எவ்வளவோ முயன்றும் அதனை சரி செய்ய முடியவில்லை என்றும் விபத்து குறித்து அவர் குறிப்பிட்டார்.  இந்த விபத்து எதிர்பாரத ஒன்று என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கடலுக்கு அடியில் பயங்கரம்.. மிரள வைக்கும் வீடியோ காட்சிகள்..

விபத்துக்குள்ளான  சி-130 ரக விமானங்கள் பொதுவாக படைகளையும் பொருட்களையும் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.  பேரிடர் மீட்பு பணிகளின்போது இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

First published:

Tags: Philippines