பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பைசர் கொரோனா தடுப்பூசி: 90 வயது பாட்டிக்கு முதல் ஊசி

பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பைசர் கொரோனா தடுப்பூசி: 90 வயது பாட்டிக்கு முதல் ஊசி

முதல் நபராக கொரோனா தடுப்பூசி பெண் முதியவர்

பிரிட்டனில் 90 வயது முதிய பெண்மணிக்கு பைசர் கொரோனா தடுப்பூசி முதன் முதலாக செலுத்தப்பட்டது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்றால் பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000-த்தை நெருங்கியுள்ளது. இதனால் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரிட்டன் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவுக்கான அதிகாரபூர்வ மருந்தாக ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரித்தது.

  ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதியைக் கடந்த வாரம் இங்கிலாந்து வழங்கியது. இதையடுத்து முதல்கட்டமாக 8 லட்சம் தடுப்பூசி குப்பிகள் இங்கிலாந்திற்கு வழங்கப்பட்டுள்ளன. 975 குப்பிகள் கொண்ட தடுப்பூசி தொகுப்புகள் ஞாயிறன்று குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. முதலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக இரண்டரை கோடிப்பேருக்கு தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

  இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்காக தங்களை யாரும் அழைக்க தேவையில்லை என்றும், தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  இந்தநிலையில், இன்று கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி, பிரிட்டனைச் சேர்ந்த மார்கரீட் கீநன் என்ற 90 வயது முதிய பெண்மணிக்கு செலுத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்றே தடுப்பூசி செலுத்தும் பணியை ரஷ்யா தொடங்கி விட்டாலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, முறையாக மூன்று கட்ட சோதனைகளையும் முடித்து அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பைசர் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: