Home /News /international /

கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை 89% குறையும் எனத் தகவல்

கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை 89% குறையும் எனத் தகவல்

பைசர்

பைசர்

பாக்ஸ்லோவிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையோ அல்லது இறப்பு ஏற்படும் நிலையோ 89 விழுக்காடு குறையும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இங்கிலாந்தில் எம்.எஸ்.டி. எனப்படும் Merck Sharp and Dhohme என்ற கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனமான பைசர் தனது மாத்திரையின் ஆய்வு விவரங்களை தெரிவித்துள்ளது.

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான பைசர், Paxlovid எனப்படும் கொரோனா தடுப்பு மாத்திரை தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,219 பேரிடம் இந்த மாத்திரையை கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதாவது, கொரோனா அறிகுறி தெரிந்த 3 நாட்களில் அவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அதன் முடிவில், பரிசோதனைக்கான வேறு டம்மியான மாத்திரை எடுத்துக் கொண்டவர்களில் 7 விழுக்காட்டினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாக்ஸ்லோவிட் மாத்திரை எடுத்துக் கொண்டவர்களில் பூஜ்யம் புள்ளி 8 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    அதேபோல, பரிசோதனைக்கான டம்மி மாத்திரை சாப்பிட்டவர்களில் 7 பேர் இறந்த நிலையில், பாக்ஸ்லோவிட் மாத்திரை சாப்பிட்டவர்களில் யாரும் மரணிக்கவில்லை. இதன் மூலம், பாக்ஸ்லோவிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையோ அல்லது இறப்பு ஏற்படும் நிலையோ 89 விழுக்காடு குறையும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மிகவும் சாதகமான முறையில் முடிவுகள் வந்ததால் பரிசோதனையை முன்கூட்டியே முடித்துக் கொண்டதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தினமும் இருமுறை மூன்று மாத்திரைகள் வீதம் ஐந்து நாட்களுக்கு இந்த கொரோனா தடுப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை முடிவுகளை விரைவில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் அளித்து அனுமதியை பெற பைசர் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19, Pfizer

    அடுத்த செய்தி