பெட்ரோல், டீசல் விலை இந்த உலகம் பார்த்திராத அளவுக்கு உயரும்! எச்சரித்த சவுதி இளவரசர்

ஈரானைத் தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்யவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

பெட்ரோல், டீசல் விலை இந்த உலகம் பார்த்திராத அளவுக்கு உயரும்! எச்சரித்த சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான்
  • News18
  • Last Updated: September 30, 2019, 2:58 PM IST
  • Share this:
ஈரான் விவகாரத்தில் உலக நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெட்ரோல், டீசல் விலை இதுவரையில் இந்த உலகம் கண்டிராத அளவுக்கு அதிகரிக்கும் என்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ள சவுதி அரேபியாவின், அராம்கோ எண்ணெய் நிறுவனம் உலகின் மிக அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் ஆகும். அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் மீது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் ஈரானிலிருந்து நடைபெற்றது என்று கருதப்படுகிறது.

அதனால், ஈரானுக்கு சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒரு விதமான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், சி.பி.எஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், ‘உலக நாடுகள் ஒன்றிணைந்து ஈரானைத் தடுக்க முன்வரவில்லையென்றால் பெட்ரோல், டீசல் விலையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும்.


அந்த விலை உயர்வு நம் வாழ்நாளில் பார்த்திராத ஒன்றாக இருக்கும். ராணுவப் பிரச்னை ஒன்றுக்கு நான் அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறேன். ஈரானைத் தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்யவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அது உலக நாடுகளை கடுமையாகப் பாதிக்கும்.

எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கும். பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்வதற்கு நான் உத்தரவிடவில்லை. நாட்டின் தலைவர் என்ற முறையில் கஷோகியின் மரணத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: September 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்