கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது.
இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 12.90 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 202.73 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
15 நாள்களுக்கு முன்னர் தான் அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.35 உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அப்போது அந்நாட்டு மக்கள் கொந்தளித்த நிலையில், அடுத்த சில வாரங்களிலேயே புதிதாக 22 ரூபாய் விலை உயர்வு என்பது கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருள்கள், உணவு பொருள்களின் விலையும் விண்ணை முட்டியுள்ளது. பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காத உயர்வை கண்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.210க்கும் ஒரு கிலோ சிக்கன் ரூ.700-800க்கும் விற்பனை ஆவதாக தகவல்கள் கூறுகின்றன. பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க உள்நாட்டு பயங்கரவாத குழுக்களும், ஆப்கானின் தாலிபான் ஆட்சியாளர்களும் பாகிஸ்தானுக்கு கடும் சாவல்களை தருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan News in Tamil, Petrol Diesel Price, Petrol Diesel Price hike