உலகின் முதல் தாவர செல்ஃபி... அறிவியலின் புதிய பரிணாம வளர்ச்சி!

ஒரு செல் 0.1 மில்லிவாட்ஸ் திறனை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் ஒரு முறை ஒரு புகைப்படத்தை எடுக்க முடியும்.

உலகின் முதல் தாவர செல்ஃபி... அறிவியலின் புதிய பரிணாம வளர்ச்சி!
தாவர செல்ஃபி (zsl.org)
  • News18
  • Last Updated: October 17, 2019, 8:26 PM IST
  • Share this:
ஃபெர்ன் என்னும் செடி வகையைச் சார்ந்த தாவரம் ஒன்று செல்ஃபி எடுத்துள்ளது. இதுதான் உலகின் முதல் தாவர செல்ஃபி ஆகும்.

உலகின் முதல் தாவர செல்ஃபி குறித்த அங்கீகார அறிவிப்பை லண்டன் உயிரியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஃபெர்ன் என்னும் ஒரு வகை தாவரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் மூலம் செல்ஃபி எடுக்கும் வகையிலான ஒரு முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

தாவரத்தில் உள்ள microbial fuel என்னும் செல்கள் உற்பத்தி செய்யும் ஆற்றல் வெளிப்பட்டு செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காடுகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காடுகளை கவனிக்க இவ்வகை தாவரங்களை கேமிரா உடன் பொருத்தும் முறை செய்முறை செய்யப்பட உள்ளது.


இதன் மூலம் அடர்ந்த காடுகளிலும் தாவர ஆற்றலை வைத்தே கேமிரா தொழில்நுட்பத்தை இயக்கலாம். அறியப்படாத தாவர, விலங்கியல் உண்மைகளையும் இந்த முறையில் ஆய்வாளர்கள் அறிய உதவும் என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள்.

பீட் ஃபெர்ன் என்னும் இத்தாவரம் உற்பத்தி செய்யும் மைக்ரோபியல் ஃபூயல் செல்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள கேதோட், அனோட் மற்றும் கெபாசிட்டர் மூலம் ஆற்றலாக உற்பத்தி ஆகிறது. கெபாசிட்டர் நிரம்பும் போது திறன் வெளியேறி செல்ஃபி புகைப்படம் எடுக்கப்படுகிறது.

ஒரு செல் 0.1 மில்லிவாட்ஸ் திறனை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் ஒரு முறை ஒரு புகைப்படத்தை எடுக்க முடியும்.மேலும் பார்க்க: கனடாவில் தனித் தீவு... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன துபாய்வாழ் இந்தியர்!

தொழிலாளி கழுத்தை சுற்றி வளைக்கும் மலைப்பாம்பு!
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்