ஹோம் /நியூஸ் /உலகம் /

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்: பெண்களுக்கு பீட்டா வேண்டுகோள்

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்: பெண்களுக்கு பீட்டா வேண்டுகோள்

பீட்டா பெண்களுக்கு வேண்டுகோள்

பீட்டா பெண்களுக்கு வேண்டுகோள்

Sex Strike: தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள்தான் மாமிசத்தை விரும்பி சாப்பிட்டுக் கொண்டு தவறு செய்கின்றனர். – பீட்டா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, Indiaworld

  மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பெண்களுக்கு பீட்டா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பான பீட்டாவின் ட்விட்டர் பதிவு சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

  பீட்டா தனது ட்விட்டர் பதிவில், ‘மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் (நிறுத்தம்) செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. பெண்களை விட மாமிசம் சாப்பிடும் ஆண்களே 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர். இது உலகம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்ற பிரச்னை.’ என்று கூறியுள்ளது.

  மேலும் செக்ஸ் ஸ்ட்ரைக் குறித்து பீட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் பீர் பாட்டில்களுடன், அசை உணவை சாப்பிடுவார்கள். மாமிசத்தை சாப்பிடுவதன் மூலம் தனது பெருமையை மற்றவர்களிடம் காட்டுவதற்கு இத்தகைய ஆண்கள் விரும்புகின்றனர். இவர்கள் இறைச்சி சாப்பிடுவதனால் மிருகங்களை மட்டும் துன்புறுத்தபடவில்லை. மாறாக இந்த பூமிக்கும் அவர்கள் கேடு செய்கின்றனர்’ என கூறியுள்ளது.

  செவ்வாய் கிரகத்தையும் விட்டுவைக்காத மனிதன்! 7,000 கிலோ குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!

  மேலும், ‘PLOS ONE என்ற அறிவியல் பத்திரிகை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களை விட மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதலாக கார்பனை வெளியேற்றகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இது பருவநிலை மாற்ற பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது.

  ஆண்கள் தங்களது செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது பருவநிலை மாற்ற பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கு ஆண்கள்தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வேலைவேண்டி கேக்கில் ரெஸ்யூம்.. தரமான சம்பவத்தைச் செய்த அமெரிக்க வேலையில்லா பட்டதாரி

  இந்த பிரச்னைக்கு தீர்வாக மிகவும் எளிதான, சத்தான வழி என்பது சைவ உணவுக்கு மாறுவதுதான். தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள்தான் மாமிசத்தை விரும்பி சாப்பிட்டுக் கொண்டு தவறு செய்கின்றனர். அவர்கள் உடனடியாக தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Non Vegetarian, Sex, Vegan