பாகிஸ்தானில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் 260 பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முன்வரிசையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பள்ளிவாசலின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
இந்த தாக்குதல் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் தாக்குதலுக்கு Tehreek-e-Taliban Pakistan என்ற பாகிஸ்தானிய தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் தங்கள் தளபதி உமர் காலிதை கொன்றதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானிய தாலிபான் அமைப்பு விளக்கமளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb blast, Pakistan News in Tamil, Taliban, Terror Attack