ஹோம் /நியூஸ் /உலகம் /

16 மாதங்களில் 5ஆவது முறை பிரதமர் மாற்றம்…! - என்னதான் நடக்கிறது ’பெரு’ நாட்டில்?

16 மாதங்களில் 5ஆவது முறை பிரதமர் மாற்றம்…! - என்னதான் நடக்கிறது ’பெரு’ நாட்டில்?

அதிபர் காஸ்டிலோ

அதிபர் காஸ்டிலோ

பெருவில் பதினாறு மாதங்களில் நான்கு பிரதமர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரமதரை அந்நாட்டு அதிபர் நியமித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, Indiaperuperuperuperu

பெருவில் பதினாறு மாதங்களில் நான்கு பிரதமர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரமதரை அந்நாட்டு அதிபர் நியமித்துள்ளார்.

தென்அமெரிக்க  நாடான பெருவில் அரசியல் ஸ்திரத்தன்மை அண்மைக்காலமாக ஆட்டம் கண்டு வருகிறது. அதனால் அங்கு நிலையான ஆட்சி அமைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு இடதுசாரிகள் மற்றும் கன்சர்வேடிவ் என இரண்டு கட்சிகளுமே சம பலத்தில் இருக்கின்றன. இதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாற்றி மாற்றி முட்டுக்கட்டை போட்டு வருகின்றன இரண்டு கட்சிகளுமே. அதிலும், இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற பிறகு அரசியல் குழப்பங்கள் அதிகரித்தே வருகின்றன.

அதிபராக இடதுசாரி காஸ்டிலோ இருக்கும்போது, நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சி பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் முக்கிய பொறுப்புகளில் ஆட்கள் நியமிப்பதில் இருந்து முக்கிய முடிவுகள் எடுப்பது வரை அனைத்திலுமே குழப்பம் தான். அதிலும் அந்நாட்டிற்கான பிரதமரை தேர்வு செய்வதில் ஆகப்பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. இந்த அரசியல் குழப்பத்தால் கடந்த பதினாறு மாதங்களில் பெரு நாட்டில் நான்கு பிரதமர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அனல் பறக்கும் பேச்சு.. சீனாவை தெறிக்கவிட்ட ரிஷி சுனக்.. சீன உறவை முறிக்கிறதா இங்கிலாந்து!

முந்தைய பிரதமராக இருந்த அனிபல் டோரஸ் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பெருவின் கலாச்சார மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராக இருக்கும் 33 வயதான பெட்ஸி சாவேஸ் என்பவரை பெருவின் பிரதமராக அதிபர் காஸ்டிலோ நியமித்துள்ளார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் காஸ்டிலோ மீது எதிர்க்கட்சிகள் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் அளித்துள்ளன. ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் மீது விசாரணை நிலுவையில் உள்ளது.

அதிபர் காஸ்டிலோ தனது அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டி இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் அதிபராக பெறுப்பேற்றார். வரும் 2026ஆம்  ஆண்டு இவரை அவரது பதவிக்காலம் இருக்கும் நிலையில், தன் பதவியைப் பறிப்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது குற்றம்  சாட்டப்படுவதாகவும், தான் ஒரு போதும் பதவி விலகமாட்டேன் எனவும் காஸ்டிலோ கூறிவருகிறார்.

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சாவேஸ் முப்பது நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்யை நிரூபிக்கவேண்டும். அப்போது தான் அவர் பிரதமராக நீடிக்க முடியும். இப்படி தீராத அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது பெரு நாடு. குழப்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் காத்திருக்கிறார்கள் அந்நாட்டு பொதுமக்கள்.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: Peru, President