கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

கொரோனா

வியட்நாம் நாட்ட்ல் ஏப்ரல் மாதத்தில் சில ஆயிரங்களாக இருந்த மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 4.80 லட்சத்தை கடந்துள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், கொரோனா நோயை  பரப்பியதாக வியட்நாம் நாட்டில் இளைஞர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா பெருந்தொற்றால்  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தொற்று வியட்நாமில் பரவத் தொடங்கியப் போது அந்நாட்டு அரசு மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சிறப்பாக கொரோனாவை கையாண்டதாக வியட்நாமுக்கு பாராட்டுகளும் குவிந்தது.

  தற்போது, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில ஆயிரங்களாக இருந்த மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 4.80 லட்சத்தை கடந்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து கா மவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி (Le van tri) என்னும் நபர், 21 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல்  சுற்றித் திரிந்துள்ளார்.  இவரால் 8 பேருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: ஆண்கள்-பெண்கள் இடையே திரை வைத்து மறைப்பு: ஆப்கான். பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை!


  இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக லீ வான் ட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக வியட்நாமில் ஏற்கனவே இருவருக்கு  தலா 18 மாதங்கள் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: