முகப்பு /செய்தி /உலகம் / வங்க தேசத்தில் எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரிப்பு - பொதுமக்கள் போராட்டம்

வங்க தேசத்தில் எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரிப்பு - பொதுமக்கள் போராட்டம்

எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Bangladesh : வங்கதேசத்தில் எரிபொருள் உயர்வால் இதர பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Bangladesh , India

வங்க தேசத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு எரிபொருள் விலை உயர்வு, 50 சதவீதத்திற்கு மேல் தாண்டிய நிலையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. எரிபொருள் பங்குகளை முடக்கி மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர்.

வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதும் மக்கள் போராட்டம் தொடங்கியது. தற்போது உயர்த்தப்பட்ட விலை வங்க தேச வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்று வங்க தேச ஊடகம் தெரிவித்துள்ளது.

தற்போது உயர்த்தப்பட்ட விலையின் படி டீசல் ஒரு லிட்டருக்கு 34 டகா (28.41 ரூபாய்), பெட்ரோல் ஒரு லிட்டர்க்கு 44 டகா (36.76 ரூபாய்) மற்றும் ஆக்டேன் ஒரு லிட்டர்க்கு 46 டகா (38.44 ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது.

வங்க தேச ஊடகங்கள் இந்த உயர்வு 51.7 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளன. வங்க தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த அளவிலான விலை உயர்வை மக்கள் சந்திக்காத நிலையில் இந்த உயர்வு உலக வர்த்தக சந்தையின் படி தவிர்க்க முடியாதது என்று அரசு தெரிவித்துள்ளது.

Also Read :புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் கொரோனா பரவல்.. 80,000 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித்தவிப்பு

எரிபொருள் விலை உயர்வால் கோபமடைந்த மக்கள் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் பல நிலையங்களில் நள்ளிரவிலும் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக நின்றுகொண்டிருந்தனர்.

வேகமாக வளர்ந்து கொண்டிருந்த வங்க தேசம் தற்போது உயரும் எரிபொருள் மற்றும் உணவு விலை காரணிகளால் சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடன் வாங்கும் நிலைமையில் உள்ளது.

இந்த விலை உயர்வை எதிர்த்து மாணவ சங்கங்கள் தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய அருங்காட்சியகம் எதிரில் போராட்டம் நடத்தினர். எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read :தைவானில் அதிகரிக்கும் போர் பதற்றம் - சர்வதேச ஆதரவு கோரும் தைவான் அதிபர்!

இந்த நிலைமையைப் பற்றி எரிசக்தி அமைச்சகம், கடந்த 6 மாதங்களில் 8 மில்லியன் டகா அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தால் இங்கும் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

வங்க தேசத்தில் பண வீக்கம் கடந்த 9 மாதங்களில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வறுமை மற்றும் நடுத்தர மக்களில் தினசரி வாழ் வாதத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையுள்ளது.

First published:

Tags: Bangladesh, Fuel Price hike, Fuel Price Increased, Petrol hike protest