ஹோம் /நியூஸ் /உலகம் /

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி... சீனாவில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி... சீனாவில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

சீனாவில் லாக்டவுனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

சீனாவில் லாக்டவுனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiachinachina

சீனாவில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேலாக உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக வேகமாக தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் 2 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறித்த காற்றுமாசு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியான், மாறும் சூழலுக்கு ஏற்ப கொரோனா பரவல் தடுப்புக் கொள்கையை அரசு மாற்றிவருவதாக தெரிவித்தார். கொரோனாவால் சமூக பொருளாதார மேம்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

First published:

Tags: China, Corona, Covid-19, Lockdown