ஹோம் /நியூஸ் /உலகம் /

பிளாஸ்டிக் பையில் எரிவாயு கேஸ்.. வெடிகுண்டுக்கு சமமான ஆபத்து - பாகிஸ்தானில் ரிஸ்க் எடுக்கும் மக்கள்!

பிளாஸ்டிக் பையில் எரிவாயு கேஸ்.. வெடிகுண்டுக்கு சமமான ஆபத்து - பாகிஸ்தானில் ரிஸ்க் எடுக்கும் மக்கள்!

பிளாஸ்டிக் பையில் சமையல் எரிவாயு நிரப்பிச்செல்லும் பாகிஸ்தான் மக்கள்

பிளாஸ்டிக் பையில் சமையல் எரிவாயு நிரப்பிச்செல்லும் பாகிஸ்தான் மக்கள்

இப்படியே சாலையில் எடுத்துச்செல்வது வெடிகுண்டை கையில் வைத்திருப்பதற்கு சமம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் செய்யும் ரிஸ்க்கான செயல்களைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக,  பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் உற்பத்தி என்பது கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சிலிண்டர் இல்லாமல் காஸ் பெறவேண்டும் என்பதற்காக  வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், உள்ளூர்வாசிகள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகளில்  3 அல்லது 4 கிலோ சமையல் எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது. நிரப்பிய பைகளின் முகப்புகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொண்டு எடுத்துச்செல்கின்றனர்.

இப்படியே சாலையில் எடுத்துச்செல்வது வெடிகுண்டை கையில் வைத்திருப்பதற்கு சமம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கொண்டு செல்லும் சமையல் எரிவாயு பைகளை மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கூட வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது பன்மடங்கு  உயர்ந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் பைகளால் காயமடைந்து 8 நோயாளிகள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

First published:

Tags: Gas Cylinder Price, Inflation