Home /News /international /

Corona | இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்.. சீனாவில் கெடுபிடி - வீடியோ

Corona | இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்.. சீனாவில் கெடுபிடி - வீடியோ

China Lockdown

China Lockdown

சீனா பின்பற்றி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சீனாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் இரும்பு பெட்டி வசிப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல தீவிர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. ஆரம்பம் முதலே நோய்த்தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை எடுத்து சீன அரசு அமல்படுத்தியுள்ளது. இதனிடையே தற்போது ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய நிலையில் மக்கள் தொகையில் உலகின் நம்பர் - 1 இடத்தில் இருந்து வரும் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.



    Xi'an , Anyang, Yuzhou, Tianjin போன்ற அதிகளவு மக்கள் வசிக்கும் நகரங்களில் தீவிரமான முழு ஊரடங்கை சீன அரசு அமல்படுத்தியிருப்பதுடன், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது. Zero Covid Policy என்ற கொள்கையின்படி அமல்படுத்தப்படும் இந்த தீவிர நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உணவு வாங்க கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பசியால் மக்கள் வாடி வருவதாக அந்நாட்டு மக்கள் வெய்போ சமூக ஊடகம் மூலமாக அபயக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.



    Anyang நகரில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கு ஓமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவதற்காக விளையாட்டு மைதானங்களில் விஷேச இரும்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருந்தாலும் கூட அந்தப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், பெண்கள் போன்றோர் நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஏற்றப்பட்டு இந்த தனிமை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர். இந்த முகாம்களில் சிறிய அளவுள்ள இரும்பு பெட்டிகளில், ஒரு கட்டிலும், ஒரு கழிவறையும் உள்ளன. இங்கு அவர்கள் 12 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள்.



    சீனா பின்பற்றி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
    Published by:Arun
    First published:

    Tags: China, Lockdown

    அடுத்த செய்தி