தாலிபான்கள் மீதான அச்சம் காரணமாக ஆப்கான் மக்கள் காபூல் விமானநிலையத்தில் குவிந்து கிடக்கின்றனர். ரயிலில் ஏறுவது போல் விமானத்தில் அடித்துப்பிடித்துக்கொண்டு மக்கள் ஏறும் காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை எனக்கூறி ஆப்கானை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் அதிபர் அஷ்ரப் கனி. அதிபரும், அரசு அதிகாரிகளும் தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துவிட்டனர். தாலிபான்களின் தாக்குலில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேற தொடங்கிய பின்னர் தாலிபான்கள் அரசு படைகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஆப்கான் அரசு ஒவ்வொரு பகுதிகளாக மெல்ல இழக்கத் தொடங்கியது.

அஷ்ரப் கனி
அரசுப்படைகளை சேர்ந்த வீரர்கள் தாலிபான்களுடன் சண்டையிட முடியாமல் பின்வாங்கினர். ஆப்கான் மக்கள் தங்கள் நாட்டுக்குள்ளே பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயரத் தொடங்கினர். காபூலுக்கு சென்றால் உயிராவது மிஞ்சும் என நடக்கத் தொடங்கினர். அவர்களின் முன்பு இரண்டே விருப்பங்கள்தான் இருந்தது. சொந்த நகரங்களில் இருந்து இறப்பதா அல்லது காபூலுக்கு சென்று கஷ்டப்படுவதா இரண்டாவது தேர்வை முடிவு செய்த மக்கள் காபூலுக்கு புறப்பட்டனர்.
Also Read: ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி: ஒரு பொருளாதார அறிஞரின் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்
காபூல் நகரம் ஒன்றும் யாரையும் சிவப்பு கம்பளம் விரிந்து வரவேற்கவில்லை. பல்வேறு நகரங்களில் இருந்து காபூலுக்கு வந்தவர்கள் இடிபாடுகளுடன் கூடிய கட்டடங்களிலும், சாலைகளிலும் தஞ்சமடைந்தனர். நேற்று காபூலை சுற்றி வளைத்த தாலிபான்கள் ராணுவ தாக்குதல் மூலம் உள்ளே நுழைய விரும்பவில்லை என கூறி, அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்று தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து, காபூலுக்குள் நுழைந்த தாலிபன்கள், ஆயுதங்களுடன் சென்று அதிபர் மாளிகையை முழுவதுமாக கைப்பற்றினர்.

தாலிபான்
ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இனி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என அழைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். தாலிபான்கள் இஸ்லாமிய மத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கடுமையான போக்கை கடைப்பிடிப்பார்கள். பெண் கல்விக்கு தடை, ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே நடமாடக்கூடாது, சினிமா, டிவி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடை இருக்கும். இதனை மீறினால் மரண தண்டனை என்பது தாலிபான்களின் வழக்கம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தாலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடு வாழ முடியாது. அவர்களில் அடக்குமுறைகளின் வாழ இயலாது என்பதால் ஆப்கானை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கு தஞ்சமடைய ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அந்நாட்டு அரசுகள் தனிவிமானம் மூலம் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆப்கான் மக்கள் காபூல் விமானநிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். காபூல் நகர சாலைகளில் கையில் பெட்டிகளுடன் சாரை சாரையாக பொதுமக்கள் காபூல் விமான நிலையத்துக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
காபூல் விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விமானத்தில் ஏதோ ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறுவது போல் அடித்துப்பிடித்து ஏறுகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விமானங்கள் எல்லாம் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகிறது. காபூல் விமானநிலையத்தில் அமெரிக்க படைகள் இன்னும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். காபூல் விமானநிலையத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காபூலில் இருக்கும் அமெரிக்கர்கள் யாரும் விமான நிலையம் வரவேண்டாம். அவரவர் இருப்பிடத்திலே பத்திரமாக இருக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனக் கூறும் தாலிபான்கள் வெளிநாட்டவர்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம் அவர்கள் தாலிபான் அதிகாரிகளிடம் தங்களின் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.