உளவு கருவிகள் உள்ளதால்தான் மக்கள் நிம்மதியாக உறங்க, சுதந்திரமாக நடமாட முடிகிறது; பெகாசஸ் தயாரிப்பு நிறுவனம்

உளவு கருவிகள் உள்ளதால்தான் மக்கள் நிம்மதியாக உறங்க, சுதந்திரமாக நடமாட முடிகிறது; பெகாசஸ் தயாரிப்பு நிறுவனம்

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தங்களது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் NSO கூறியுள்ளது.

 • Share this:
  பெகாசஸ் போன்ற உளவுக் கருவிகள் உள்ளதால் தான், உலகம் முழுவதில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனை தயாரித்த NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உலகின் முக்கிய தலைவர்களும் பத்திரிகையாளர்களும் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவுக் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தமுள்ள 50 ஆயிரம் பேரில், இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் யூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் அதிகாரி அசோக் லவசா, முன்னணி பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இப்புகார் குறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் நாடு உத்தரவிட்டுள்ள நிலையில், பெகாசஸ் போன்ற உளவு கருவிகள் உள்ளதால் தான், மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனை தயாரித்த NSO நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அதனை வாங்கியவர்கள் யாரை கண்காணிக்கிறார்கள் என்ற தரவுகள் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

  Also read: இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு!!

  மறைகுறியாக்கப்பட்டவை என்ற போர்வையில் செயல்படும் செயலிகள் மூலம் நடைபெறும் குற்றங்களை பெகாசஸ் போன்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உளவு மென்பொருள்கள் கண்காணிப்பதாகவும் NSO தெரிவித்துள்ளது. பயங்கரவாத சதிகளை தடுத்து நிறுத்த சட்டங்களை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு இணைய புலனாய்வு நிறுவனங்கள் உதவி வருவதாகவும் NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தங்களது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் NSO கூறியுள்ளது.

  Also read: அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமானது!

  பெகாசஸ் மீதான புகார்கள் குறித்து ஆராய இஸ்ரேல் குழு அமைத்துள்ளதை, NSO நிறுவனர்களின் ஒருவரான ஷாலிவ் ஹுலியோ வரவேற்றுள்ளார். இந்திய நாட்டு அரசு பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கியதா என்ற கேள்விக்கு ஹுலியோ பதில் அளிக்கவில்லை.
  Published by:Esakki Raja
  First published: