கடந்த மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவின் விமான படை தளத்தின் மீது சீனாவின் உளவு பார்க்கும் பலூன் ஒன்று பறந்தது தெரியவந்தது. நாட்டின் ராணுவ வளங்களை பற்றிய தரவுகளை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்று யூகத்தில் அதை சுட்டுத்தள்ள அமெரிக்கா திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இருந்து வெளிப்படும் குப்பைகள் மக்களை பாதிக்கும் என்பதனால் அதை செய்யாமல் இருந்தனர்.
பிப்ரவரி 4 அன்று அட்லாண்டிக் பெருங்கடல் பக்கம் உளவு பலூன் திரும்பிய நிலையில் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. உடனேயே பலூன் பாகங்களை மீட்கும் பணி தொடங்கியது. இந்தப்பணியானது பிப்ரவரி 17 அன்று முடிவடைந்தது. சிதறிய துண்டுகள் வர்ஜீனியாவில் உள்ள ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உளவு விமானத்தை சுட்டு தகர்க்கும் முன்னர் அதைக்கண்காணித்த 'எப்-2 ராப்டர்' போர் விமானத்தின் விமானி ஒருவர் விமானத்தின் முகப்பில் இருந்து உளவு பார்க்கும் பலூனோடு ஒரு செல்ஃபி எடுத்துள்ளார். மிதந்துகொண்டிருந்த பலூன் மீது அதன் தன்மையை ஆராய பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் இருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் அறுபதாயிரம் ஆதி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படத்தில் பெரிய காற்றடைத்த பலூனின் கீழ் சோலார் பேனல்கள் மற்றும் படங்களை சேகரிக்கும் உபகரணங்கள் கட்டிவிடப்பட்டது தெளிவாக தெரிகிறது. அதோடு பலூனின் மேலே பறந்துகொண்டிருந்த போர் விமானத்தின் நிழலும் படத்தில் பதிவாகியுள்ளது.
இந்த படத்தை அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமை செயலகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உலகின் தலைமைக்கு போட்டி போடும் இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்டதாலோ அமெரிக்காவால் சுட்டுத்தள்ளபட்ட சீனாவின் உளவு பலூனின் படம் என்பதாலோ என்னவோ இந்த செல்ஃபி படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, United States of America