ஹோம் /நியூஸ் /உலகம் /

அணுகுண்டு வீசும் புதிய ரக பாம்பர் விமானம்… அறிமுகப்படுத்தியது பெண்டகன்!

அணுகுண்டு வீசும் புதிய ரக பாம்பர் விமானம்… அறிமுகப்படுத்தியது பெண்டகன்!

பி-21 விமானம்

பி-21 விமானம்

பி-21 ரைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தை அறிமுகம் செய்யும் விழா நேற்று நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, Indiaamericaamericaamerica

அமெரிக்க  ராணுவ மையமான பெண்டகன் நேற்று புதிய அணுகுண்டு வீசும் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த புதிய, ரகசிய விமானத்தை கட்டமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் ஈடுபட்டிருந்தது. இந்த விமானம் எந்த ரேடாரின் கண்ணுக்கும் சிக்காமல் எதிரியின் எல்லைக்குள் சென்று அணுகுண்டு வீசும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பி-21 ரைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தை அறிமுகம் செய்யும் விழா நேற்று நடைபெற்றது. மிகுந்த பாதுகாப்புடன் மிகச் சிலருக்கு மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது வெறும் விமானம் மட்டுமல்ல. அமெரிக்கா விரும்பும் மக்களாட்சியை உறுதியுடன் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை என பெருமிதத்துடன் கூறினார் அமெரிக்க ராணுவ அமைச்சக செயலர் லாயிட் ஆஸ்டின். தானாக எல்லையை குறிவைத்து அணுஆயுத ஏவுகனையை  செலுத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த புதிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் 2035 ஆம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,500 அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி சீனா சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் புதிய அணுஆயுத ஏவுகனை வீசும் விமானத்தின் அறிமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது. 21 ஆம் நூற்றாண்டில், நமக்கு சிககலான பல அச்சுறுத்தல்கள் வரலாம். எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையிலான ராணுவ முன் தயாரிப்பு மிக முக்கியம். நமக்கு அச்சுறுத்தல் எங்கிருந்தும் வரலாம். குறிப்பாக சீனாவிடம் இருந்தே அதை விரைவில் எதிர்பார்க்கலாம் என பெண்டகன் ராணுவ மையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மேலும், இந்திய-சீன எல்லை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் புதிய பாம்பர் விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டிருப்பதாக இந்த விமானத்தை உருவாக்கிய நார்த்ரோப் கிரம்மான் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனநாயகம் குறித்து எங்களுக்கு வகுப்பு எடுக்க தேவையில்லை: ஐநாவின் இந்திய பிரதிநிதி பேச்சு

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தேவையான நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் இந்த விமானத்தில் இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இந்த விமானம் வானில் பறக்கும்போது எதிரிகளால் இந்த விமானத்தை கண்டுபிடிப்பது மிக் மிக சிரமம் என்கிறது பெண்டகன் ராணுவ மையம்.

தாழ்வாக பறக்கும் பொது இந்த விமானம் பறப்பதை உங்களாால் கேட்க முடியும். ஆனால் பார்க்க முடியாது என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது. இதே போன்ற ஆறு புதிய விமானங்கள் உற்பத்தியில் இருப்பதாகவும், மேலும் 100 விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Air force, America