ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகம் முழுதும் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி 50,000 பேரின் செல்போன் தகவல் களவாடப்பட்டதாக பரபரப்பு புகார்

உலகம் முழுதும் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி 50,000 பேரின் செல்போன் தகவல் களவாடப்பட்டதாக பரபரப்பு புகார்

பெகாசஸ் என்ற பெயருக்குக் காரணமான புராணிக இறக்கை உடைய குதிரை.

பெகாசஸ் என்ற பெயருக்குக் காரணமான புராணிக இறக்கை உடைய குதிரை.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின்செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெகாசஸ் உளவு சாப்ட்வேரானது ஸ்மார்ட்போன் கேமிரா மற்றும் மைக்ரோபோனை குறிவைத்து தகவல்களை திருடும் தன்மை கொண்டது.

  இது தொடர்பாக அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட், யுகேவின் தி கார்டியன், இந்தியாவின் தி ஒயர் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு கழகத்தின் 2 அதிகாரிகள், பன்னாட்டு என்.ஜி.ஓ.க்களான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்கள் ஆகியோரது செல்போன் விவரங்களும் இலக்குப் பட்டியலில் இருந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளன.

  2016-ம்ஆண்டிலிருந்து பெகாசஸ் மால்வேர் சாஃப்ட்வேர் தொடர்ந்து சர்ச்சையில் இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டக் குழுவுக்கு தேவையான தகவல்களை இந்த உளவு மென்பொருள் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது என்கிறது கார்டியன் இதழ்.

  ஏறக்குறைய 50 ஆயிரம்பேரின் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மெக்சிகோவில் மட்டும் 15 ஆயிரம் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு விமர்சகர்கள் ஆகியோரது செல்போன்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

  மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரின் ஸ்மார்ட்போன் எண்ணும் இடம்பெற்றுள்ளது. அஜர்பெய்ஜானின் பெண் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் தள்ளப்பட்டார், இவரது செல்போனும் தகவல் திருட்டுக்கு ஆளானது. இவர் காரை சுத்தப்படுத்தும் மையத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் இவர் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் இதுவரை கிடைக்கவேயில்லை. அவரது போனில்இருந்த தகவல்கள் திருடப்பட்டனவா என்ற விவரமும் தெரியவில்லை என `கார்டியன்’ பத்திரிகை கூறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் எனும் செயலி மூலம் பத்திரிகையாளர்கள், இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  மத்திய அரசு மறுப்பு:

  கடந்த 2019ம் ஆண்டு ஏற்கனவே, வாட்ஸ் ஆப் செயலியின் தகவல்களை இதே பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டையும் ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது.

  பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் மத்திய அரசு உளவுபார்க்கவில்லை என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

  இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பாக யாரையும் அதிகாரப்பூர்வமாக உளவு பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்துகின்றனர்.

  கடந்த 2019ம் ஆண்டு ஏற்கனவே, வாட்ஸ் ஆப் செயலியின் தகவல்களை இதே பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டையும் ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்திருந்தது. இதுவரை அந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

  நேற்று இது தொடர்பாக என்எஸ்ஓ குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. தவறான தகவலை வெளியிட்டதற்காக `வாஷிங்டன் போஸ்ட்’ மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India, Israel