ஹோம் /நியூஸ் /உலகம் /

அமைதியை விரும்பினால் முதலில் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்

அமைதியை விரும்பினால் முதலில் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்

ஐநா பொது சபையில் இந்தியா உரை

ஐநா பொது சபையில் இந்தியா உரை

அண்டை நாட்டுடன் அமைதியை விரும்பும் நாடு எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaGenevaGeneva

  ஐநா பொதுச்சபையில் 77ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அதன்படி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் தனது உரையில் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து முக்கிய கருத்தைகளை பேசினார். ஷெபாஷ் ஷெரிப் தனது உரையில், "இரு நாடுகள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வை தரும்.

  பிரச்சனைகளை தீர்க்க போர் என்பதை கையிலெடுக்கக் கூடாது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள்தான் இரு நாட்டின் அமைதிக்கு எதிராக உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை.இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார். அமைதியை பாகிஸ்தான் தரப்பு விரும்பவுதாகவும் இந்தியாவும் அதை நோக்கி நகர வேண்டும் என்பதே அவரின் உரையின் சாரமாக இருந்தது.

  இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு இந்தியா தனது உரையில் பதில் தெரிவித்துள்ளது. ஐநா பொதுச் சபையில் இந்தியா சார்பில் தூதர் மிஜிடோ வினிடோ உரையாற்றினார். இந்திய தூதர் தனது உரையில், "பாகிஸ்தான் பிரதமர் இந்த தளத்தை இந்தியா மீது தவறான பழிகளை போடும் நோக்கில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இது வருந்தத்தக்கது. தனது சொந்த நாட்டின் தவறுகளை மூடி மறைக்க இந்தியா மீது பொறுப்பை சுமத்தும் வேலையை பார்க்கிறார்.

  அண்டை நாட்டுடன் அமைதியை விரும்பும் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது. அதேபோல், மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற கொடூர தாக்குதலின் மூளையாக இருந்த நபர்களுக்கு தனது நாட்டில் அடைக்கலம் தராது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாமல் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி என்பது சாத்தியமில்லை. எனவே, பாகிஸ்தான் முதலில் தனது தரப்பை முறையாக சரி செய்த பின்னர் அமைதி குறித்து பேசலாம்" என்றார்.

  இதையும் படிங்க: ஈரானில் தீவிரமடையும் ஹிஜாப் போராட்டம்.. காவல்துறை நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோர் பலி

  2020ஆம் ஆண்டு ஐநா சபையில் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தை உரையின் போது எடுத்தார் என்பதற்காக இந்தியா சார்பில் இருந்த இதே தூதரான மிஜிடோ சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். நாகாலாந்தைச் சேர்ந்த மிஜிடோ தென்கொரியாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: India and Pakistan, India external minister, Terror Attack, United Nation