• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கலை, பண்பாடு, வரலாற்றுத் தளங்கள்: உலகில் சிறந்து விளங்கும் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா?

கலை, பண்பாடு, வரலாற்றுத் தளங்கள்: உலகில் சிறந்து விளங்கும் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா?

பாரிஸ் (பட்ம்: Reuters)

பாரிஸ் (பட்ம்: Reuters)

இன்கிஃபி வெளியிட்ட அறிக்கையில், கலாச்சார ஆர்வலர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பாரிஸுக்குப் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
’இன்கிஃபி’ எனும் பிரிட்டிஷ் வலைத்தளம், படைப்பு ஊக்கமுள்ள இடங்களை மதிப்பீடு செய்ய உலகெங்கிலுமுள்ள 75 நகரங்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தது. அதில் கலை, இசை, கட்டடக்கலை ஆகியவற்றில் லண்டன் மற்றும் நியூயார்க்கை விஞ்சும் வகையில் பாரிஸ் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இன்கிஃபி வெளியிட்ட அறிக்கையில், கலாச்சார ஆர்வலர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பாரிஸுக்குப் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தியேட்டர்கள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிகப் பரவலாகக் காணப்படுவதாகவும் சுட்டுக்காட்டியுள்ளது. மேலும், தெரு ஓவியங்கள் நிறைந்த நகரம் பாரிஸ். அங்கே எடுக்கப்பட்ட 8,24,000 தெரு ஓவியங்கள் அடங்கிய படங்களை இன்ஸ்டாகிராமில் அதன் பயனர்கள் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் உலகின் மிகவும் படைப்பு ஆக்கமுள்ள நகரங்களின் தரவரிசையில் பாரிஸ் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது, மூன்றாவது இடங்களில் பார்சிலோனாவும் டப்ளின் (Dublin) நகரங்களும் இடம்பெற்றுள்ளன. கலை, இசை, கட்டடக்கலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 100 மதிப்பெண்களுக்கு வைத்த ஆய்வில், பாரிஸ் ஒட்டுமொத்தமாக 80.92% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. பார்சிலோனா 38.03%, டப்ளின் 31.82% மதிப்பெண்களை பெற்றுள்ளன.

பார்சிலோனாவில் ஏரளாமான வரலாற்று நினைவுச் சின்னங்களும் சிலைகளும் உள்ளன. டப்ளின் 30 நகைச்சுவை கிளப்புகளைக் கொண்டுள்ளது என இன்கிஃபி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நான்காவது இடத்தில் உள்ளது, இது நாடக ஆர்வலர்களுக்குப் பிடித்த ஐரோப்பிய இடம். இங்கு 200-க்கும் மேற்பட்ட தியேட்டர் ஹால்கள் உள்ளன.

Also read: 6 மாதங்களுக்கு திறக்கப்பட்ட தாஜ்மஹால் - முதல் ஆளாக பார்வையிட்ட சீனர்



டெல் அவிவ், நியூயார்க் மற்றும் மிலன் ஆகிய நகரங்களும் உலகின் மிகவும் படைப்பு ஆக்கமுள்ள நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நகரங்கள் கலாச்சார நிகழ்வுகளுக்கான சிறந்த இடமாகும். மேலும் இங்கு உலகளவில் கொண்டாடப்படும் முன்னணி இசைக் கலைஞர்களும் உள்ளனர்.

இந்த பட்டியலில் லாஸ் ஏஞ்சல்ஸ் 8வது இடத்திலும், மியாமி 9வது இடத்திலும், சான் பிரான்சிஸ்கோ 12வது இடத்திலும், சிகாகோ 13வது மற்றும் ஆர்லாண்டோ 18வது இடத்திலும் உள்ளன. இன்கிஃபி இந்த தரவரிசையை நிறுவ யூகோவ், இன்ஸ்டாகிராம், அஹ்ரெஃப்ஸ், டிரிப் அட்வைசர் மற்றும் யூரோமோனிட்டர் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து தகவலைச் சேகரித்துள்ளது.

உலகளவில் ஆக்கபூர்வமான முதல் 10 நகரங்கள்:

1. பாரிஸ்
2. பார்சிலோனா
3. டப்ளின்
4 . லண்டன்
5. டெல்-அவிவ்
6. நியூயார்க்
7. மிலன்
8. லாஸ் ஏஞ்சல்ஸ்
9. மியாமி
10. போர்டோ

மேற்கண்ட 10 நகரங்கள் உலகின் சிறந்த படைப்பூக்கமுள்ள நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: