• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சுமார் 200 நாடுகளால் ஏற்கப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின் ரூல் புக்!

சுமார் 200 நாடுகளால் ஏற்கப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின் ரூல் புக்!

பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது சுமார் 200 நாடுகள் ரூல் புக்கை பின்பற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க சுமார் 200 நாடுகள் போலாந்தில் ஒன்றிணைந்து, பாரீஸ் கால்நிலை ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள ‘ரூல் புக்’-க்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

ஐநா-வின் சார்பில் காலநிலை ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டி 1992-ம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் HW புஷ் தலைமையில் கையெழுத்தானது. அதன் பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை முன் வைத்தனர்.

இதன் அடிப்படையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலைக் குறைக்க நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


 ஆனால், காலப்போக்கில் பாரீஸ் ஒப்பந்தம் குறித்த விழிப்புணர்வுகள் குறைந்துவிட்டன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாகவே அறிவித்தது. இதனால் புவி வெப்பமடைதலைக் குறைக்க உலக நாடுகளை இணைத்து ஐநா எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

Donald Trump | அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்


புவி வெப்பமடைவதால் உலகில் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து ஐநா அறிக்கைகள் பல வெளியிட்டது. கடல் மட்டம் உயர்வது, பனி உறைதல், பேரழிவுகள் தொடர்தல், பல்லுயிர் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்தும் உலக மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.

இதனால் கொண்டு வரப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் இணைந்து விதிமுறைகள் அடங்கிய ‘ரூல் புக்' கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என முடிவானது. இதற்காகத் தான் சுமார் 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலாந்தில் கூடினர்.

பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது சுமார் 200 நாடுகள் ரூல் புக்கை பின்பற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து COP24 மாநாட்டின் அதிபர் மைக்கேல் குர்டிகா கூறுகையில், “பாரீஸ் ஒப்பந்தத்தின் அடிப்பையில் ரூல் புக்கை நடைமுறைக்குக் கொண்டு வருவது பெரிய பொறுப்பு. எப்படியோ அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளோம். இந்த நீண்ட பயணத்தில் எங்களால் முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இதன் பின்னர் இந்த ‘ரூல் புக்’ அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடும்.

மேலும் பார்க்க: பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேச்சு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: