• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்ற அமெரிக்க தம்பதி ... மரபணு சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்ற அமெரிக்க தம்பதி ... மரபணு சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்ற அமெரிக்க தம்பதி

செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்ற அமெரிக்க தம்பதி

செயற்கை கருவூட்டல் முறையில் கார்டினாலின் கருவை மற்றொரு பெண்ணிற்கும், அந்த பெண்ணின் கருவை கார்டினாலுக்கும் பொருந்த வைத்தது தெரியவந்தது.

  • Share this:
    அமெரிக்காவில் செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்ற பெற்றோர், குழந்தை மாறியுள்ளதாக மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மற்றும் டாப்னா கார்டினால் (Daphna Cardinale) தம்பதியினருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. இரு மாதங்களுக்குப் பின் குழந்தையிடம் தங்கள் இருவரின் சாயலும் இல்லையே என்பதை உணர்ந்த பெற்றோர் மரபணு சோதனை செய்ய முடிவெடுத்தனர்.

    அந்தச் சோதனையில் கார்டினால் பெற்றெடுத்த குழந்தை அவர்களுடையது அல்ல என்ற முடிவு கிடைத்தது.



    இதனால் நொறுங்கிப்போன தம்பதிகள் தங்களுக்கு செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறக்க உதவிய மருத்துவமனையை நாடினர்.



    அப்போது தான் தங்களது குழந்தை வேறொரு தம்பதியிடம் வளர்வதையும், அவர்களது குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொண்டிருப்பதையும் அலெக்ஸாண்டர் தம்பதியினர் உணர்ந்தனர்.



    செயற்கை கருவூட்டல் முறையில் கார்டினாலின் கருவை மற்றொரு பெண்ணிற்கும், அந்த பெண்ணின் கருவை கார்டினாலுக்கும் பொருந்த வைத்தது தெரியவந்தது.



    இதையடுத்து அந்த மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்த அலெக்ஸாண்டர் தம்பதியினர், தங்களது பிரச்னைக்கு தீவையும் தேடினர். ஒருவழியாக இரண்டு குடும்பங்களும் சந்தித்துப் பேசிய நிலையில், அவரவர் குழந்தையை அவரவரிடமே ஒப்படைப்பது என்ற முடிவிற்கு வந்தனர்.



    இதையடுத்து இரண்டு குழந்தைகளும் உரிய பெற்றோரிடம் சேர்ந்தன. ஆனாலும் பத்து மாதம் சுமந்த பந்தம் இரு குடும்பத்தினரிடையேயும் இன்றும் தொடர்ந்து வருகிறது.



    அவ்வப்போது சந்திப்பது, விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பது என இணைந்த கைகளாக இரண்டு குடும்பத்தினரும் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: