முகப்பு /செய்தி /உலகம் / உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!

உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!

உலகிலேயே முதன்முதலில் எண்ணங்களால் ட்வீட் செய்த மனிதர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் பிலிப்.

உலகிலேயே முதன்முதலில் எண்ணங்களால் ட்வீட் செய்த மனிதர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் பிலிப்.

உலகிலேயே முதன்முதலில் எண்ணங்களால் ட்வீட் செய்த மனிதர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் பிலிப்.

 • 1-MIN READ
 • Last Updated :

  இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நம்மால் பலவற்றை எளிதாக செய்து முடித்து விட முடியும். முன்பெல்லாம் நாள் கணக்கில் காத்திருந்து கடிதங்களை பெற்ற நிலை மாறி இன்று சில நொடிகளில் அவற்றை டைப் செய்து மின்னஞ்சல் வடிவில் அனுப்பி விடுகிறோம். இப்படி ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளது. தற்போது ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவை கொண்டு பல விஷயங்களை சாத்தியமாக்கி கொண்டு வருகிறோம்.

  மனிதனின் மூளை தான் இருப்பதிலேயே மிக சிறந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு பல அதிசய திறன்களை நமது மூளை கொண்டுள்ளது. இந்த மூளையின் சிக்னலை பயன்படுத்தி, தற்போதைய அறிவியலை இதனுடன் இணைத்து மாபெரும் தொழில்நுட்ப சாதனையை அறிவியலாளர்கள் செய்துள்ளனர். ஆம், கை கால்கள் செயலிழந்த நபரின் மூளையின் சிக்னலை கொண்டு அவரின் எண்ணத்தை எழுத்து உருவம் கொடுத்துள்ளனர்.

  ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில்ப் ஓ கீப் என்பவர் மோட்டார் நியூரான் என்கிற நரம்பியல் சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவருக்கு உடல் செயலற்று போனது. இவரின் மூளையில் சிறிய அளவிலான சிப் ஒன்றை புரோகிராமிங் செய்து பொருத்தி உள்ளனர். இதன் மூலம் அவரின் மூளை எழுப்பும் சிக்னலை கொண்டு அதை எழுத்தாக மாற்ற முடியும்.

  Also read:  லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்

  இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் 62 வயதாகும் பிலிப்பின் எண்ண அலைகளை எழுத்துக்களாக மாற்றி உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கிலெரோசிஸ் (amyotrophic lateral sclerosis) என்கிற நோய் தாக்கியுள்ளது. இதனால் இவரின் உடல் முழுமையாக செயலிழந்துவிட்டது. பல ஆண்டு கால ஆய்வுகளுக்கு பிறகு இவரின் மூளை சிக்னலை கொண்டு அவற்றை எழுத்துக்களாக மாற்ற முடிந்துள்ளது.

  இதன் மூலம், உலகிலேயே முதன்முதலில் எண்ணங்களால் ட்வீட் செய்த மனிதர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் பிலிப். இவர் முதலில் 'hello world' என்கிற வார்த்தையை எண்ணங்களின் மூலம் எழுத்துருவாக்கம் செய்துள்ளார். இவருக்கு மூளையில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ சிப் மூலம் சிறிய அளவிலான எண்ண அலைகளை மட்டுமே தற்போது எழுத்துருவாக்கம் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  Also read:  இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!

  இந்த நவீன தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிறுவியவர்கள் கலிபோர்னியாவை சேர்ந்த சிங்க்ரோன் என்கிற கணினி தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனியாகும். இவர்கள் இதற்கு முன்னர் இது போன்று பல நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சாதனையை பற்றி பிலிப்பிடம் கேட்டபோது, "நான் முதன்முதலில் இந்த தொழில்நுட்பத்தை பற்றி கேள்விப்படும் போது அது எந்த அளவிற்கு எனக்கு சுதந்திரம் தரும் என்று நினைத்தேன். ஆனால், உண்மையில் இது சிறப்பாக உள்ளது. இதை பயன்படுத்த முதலில் சிறிது பயிற்சி தேவைப்பட்டது. அதன் பிறகு இது இயல்பானதாக மாறி விட்டது" என்று கூறியுள்ளார்.

  First published: