ஹோம் /நியூஸ் /உலகம் /

வேலை பறிபோனாலும் கொட்டிய பணமழை.. பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு கிடைக்கும் என தகவல்!

வேலை பறிபோனாலும் கொட்டிய பணமழை.. பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு கிடைக்கும் என தகவல்!

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

ட்விட்டரை விட்டு வெளியேறும் பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, IndiaWashingtonWashington

  முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முழுமையாக கையகப்படுத்தியுள்ளார். நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அவர் அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின்படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.

  அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் முன்னணி நிர்வாகிகள் அனைவரையும் முதல் நாளிலேயே வேலையை விட்டு வெளியேற்றி எலான் மஸ்க் உத்தரவிட்டார். தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால்(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜாய கட்டே உள்ளிட்டோர் ட்விட்டரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  குறிப்பாக உச்சபட்ச பதவியான சிஇஓ பதவியில் இருந்த பராக் அகர்வால் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்தவர். பராக் அகர்வால் பம்பாயில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிஎச்டி பெற்ற பராக், 2011ஆம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்தார். சிறந்த பணியின் காரணமாக பராக் குறுகிய காலத்திலேயே நன்மதிப்பை பெற்று 2018ஆம் ஆண்டில் நிறுவனத்தின் CTO-வாக நியமனம் செய்யப்பட்டார்.

  இதையும் படிங்க: மகளை கடித்த நண்டு... பழிவாங்க அதை உயிருடன் விழுங்கி மருத்துவமனையில் அட்மிட் ஆன அப்பா

  தொடர்ந்து 2021 ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பராக்கை ட்விட்டர் நிறுவனம் பணியமர்த்தியது. தற்போது புதிய தலைமை பராக்கை பணி நீக்கம் செய்தாலும் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என நிறுவன ஒப்பந்தத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடியாகும். அதேபோல், நிறுவனத்தின் பங்கு உரிமைகள் சிலவும் பராக்கிடம் உள்ளதால் அவருக்கு மேலும் நிதி இழப்பீடு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Twitter