சீனா பக்கமே செல்லாத 3 சிங்கப்பூர் மக்களுக்கு கொரோனா உறுதி!

சீனா பக்கமே செல்லாத 3 சிங்கப்பூர் மக்களுக்கு கொரோனா உறுதி!
கொரோனா
  • Share this:
சிங்கப்பூரில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை பீதியில் உறைய வைத்துள்ள கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் புதிதாக 2,841 பேரை வைரஸ் தாக்கிய நிலையில், 81 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 33,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு நாடுகளும் அதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதனிடையே சிங்கபூரில் சீனாவிற்கே செல்லாத 3 குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு தொடக்க கல்லூரி ஆசிரியர் உட்பட 3 பேருமே இதுவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.


இந்நிலையில் சிங்கப்பூரில் ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் வேலையாட்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் படி கூறியுள்ளன.

சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ( South China Morning Post ) நாளிதழ் இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.


First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்