• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சில நாடுகளில் COVID-19 அசாதாரண நிலையை உருவாக்கும் - ஐ.எம்.எஃப்

சில நாடுகளில் COVID-19 அசாதாரண நிலையை உருவாக்கும் - ஐ.எம்.எஃப்

IMF

IMF

போதுமானதாக இல்லை என்னும் நிலையை மக்களிடம் உருவாக்கினால், நாடு அசாதாரண சூழலைச் சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார் கீதா கோபிநாத்.

  • Share this:
    சர்வதேச நாடுகளின் இயல்பான போக்கையே மாற்றியிருக்கிறது கொரோனா வைரஸ் பாதிப்பு. பல நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைவு என்று மக்களால் கருதப்பட்டாலோ, பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவான நடவடிக்கைகளாக கருதப்பட்டாலோ அந்த நாடுகளில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என சர்வதேச நாணய நிதியமான, ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

    அரசுகள் மொத்தமாக ஏற்கனவே 8 ட்ரில்லியன் டாலர்கள் இதற்காக செலவழித்துவிட்டதாகவும், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகும் அரசுகளுக்காக நிதித்தேவை அதிகமாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகப் பொருளாதாரம் முழுவதுமாக 3 சதவிகிதம் அளவில் சுருங்கப்போவதாகவும், அதனால எதிர்பாராத நிலையில்லாத்தன்மை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது ஐ.எம்.எஃப்.

    நாடுகளின் நிலையில்லாத்தன்மையை, அசாதாரண சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு கொள்கைகளை உருவாக்குவம் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் கலந்து பேசிய பின்னர் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது ஐ.எம்.எஃப்.

    ஐ.எம்.எஃப்-இன் மூத்த பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் இதுகுறித்து பேசுகையில், “இந்த சிக்கலான நிலை சரியாக நிர்வகிக்கப்படவேண்டும். இது போதுமானதாக இல்லை என்னும் மனநிலையை மக்களிடம் உருவாக்கினால், நாடு அசாதாரண சூழலைச் சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: