ஸ்பெயினில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரபலமான காளைச் சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பம்ப்லோனா பகுதியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொம்புகள் மற்றும் சிவப்பு வண்ண முகமூடிகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் ஜூலை 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பம்ப்லோனாவில் நடைபெறும் சான் ஃபெர்மின் திருவிழாவில் பிரபலமான காளைச் சண்டைப் போட்டிகள் இடம் பெறுகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஆண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு கூடிய பீட்டா மற்றும் அனிமாநேச்சுரலிஸ் அமைப்பினர் காளைச்சண்டைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.