Video | இஸ்ரேல் போலீசார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை!

”இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது”

Web Desk | news18
Updated: August 18, 2019, 12:52 PM IST
Video | இஸ்ரேல் போலீசார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை!
வீடியோ காட்சிகள்
Web Desk | news18
Updated: August 18, 2019, 12:52 PM IST
ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் போலீசாரைக் குறிவைத்து கத்தியால் தாக்க முயன்ற இரு பாலஸ்தீன சிறுவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் போலீசாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மோதல் ஏற்படுவது அங்கு தினசரி நடக்கக்கூடிய நிகழ்வாகும். குறிப்பாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது.

பழைய ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை, பாலஸ்தீன சிறுவர்கள் இரண்டுபேர் கத்தியால் தாக்கியுள்ளனர்.


இதனை அடுத்து, இரண்டு பேரையும் போலீசார் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...